இராமநாதபுரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டு பிடிக்கப்பட்ட, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 20-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடானை ஆகிய பகுதிகளில் குற்றச்செயல்கள் அதாவது கடத்தல், திருட்டு, முறையான ஆவணங்கள் இல்லாமல் நீண்ட நாட்களாக காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இந்த ஏலமானது இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ளது. வாகனங்கள் ஏலம் வாங்க விரும்புவோர் வருகின்ற 18.01.2022 அன்று மாவட்ட பி1 காவல் நிலையத்தில் வாகனங்களை பார்த்துவிட்டு 19.01.2022 அன்று பதிவு செய்ய வேண்டும்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Ramanathapuram