ராமநாதபுரம் மாவட்டம் கலை மன்றம் சார்பாக சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-2019 மற்றும் 2021-22 ஆண்டுகளுக்கான கலை விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயல், இசை, நாடகம் கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்றம் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளது
பாட்டி, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், வில்லிசை, சிலம்பாட்டம், ஆழியாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், பாம்பாட்டம், மானாட்டம், காளையாட்டம், புலியாட்டம், அரசன் அரசி ஆட்டம், ஓவியம், சிற்பம், களியல் ஆட்டம், கணியான்கூத்து, கழியல் ஆட்டம், கோல்கால் ஆட்டம், தேவராட்டம் தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் ஆட்டம் ஆகிய செவ்வியல் கலைகள் நாட்டுப்புறக் கலைகளாக உள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Ramanathapuram