Home / News / local-news /

ராமநாதபுரம்: கனமழையால் கடலுக்கு செல்லாத நாட்களுக்கு நிவாரணம்

ராமநாதபுரம்: கனமழையால் கடலுக்கு செல்லாத நாட்களுக்கு நிவாரணம்

ராமநாதபுரம்: கனமழையால் கடலுக்கு செல்லாத நாட்களுக்கு நிவாரணம்

ராமநாதபுரம்: கனமழையால் கடலுக்கு செல்லாத நாட்களுக்கு நிவாரணம்

ராமநாதபுரத்தில் கனமழையால் கடலுக்கு செல்லாத நாட்களுக்கு தேசிய கடல் சேமிப்பு நிவாரணம், தமிழ்நாடு மகளிர் சேமிப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம்,மண்டபம், தேவிபட்டினம்,கீழக்கரை மொத்தம் சேர்த்து 1500 விசைப்படகுகள், 4000 நாட்டுப் படகுகள் உள்ளன.

ஓர் ஆண்டிற்கு 52 வாரங்கள் உள்ளன. 52 வாரங்களில் மீன்பிடி தடை காலம் என்பதால் 10 வாரங்கள் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. மீதமுள்ள 42 வாரங்களே செல்கின்றனர்.

நாற்பத்தி இரண்டு வாரங்கள் மட்டும் மீன்பிடிக்க செல்லும் நிலையில் வாரத்தின் மூன்று நாட்கள் திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் கடலுக்குள் செல்வது வழக்கமாக பின்பற்றபடுகிறது.

ஆனால், இந்த ஆண்டு ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் புயல் மழை காரணமாக மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையாலும் மீனவர்கள் 17 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யவில்லை.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழையால், மூன்று முறை புயல் எச்சரிக்கை காரணமாக 17 நாட்கள் மீன்வளத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், மீனவர்களுக்கு முன்பே மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.6000 வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் தேசிய கடல் சேமிப்பு நிவாரணம், தமிழ்நாடு மகளிர் சேமிப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று மீன்வளத்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.

செய்தியாளர்: மனோஜ்குமார்,இராமநாதபுரம்

Tags:Fisherman, Heavy rain, Ramanathapuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube