Home / News / local-news /

ராமநாதபுரம்: மண் அரிப்பு ஏற்பட்டு தார்சாலை சேதம்!

ராமநாதபுரம்: மண் அரிப்பு ஏற்பட்டு தார்சாலை சேதம்!

ராமநாதபுரம்: மண் அரிப்பு ஏற்பட்டு தார்சாலை  சேதம்

ராமநாதபுரம்: மண் அரிப்பு ஏற்பட்டு தார்சாலை  சேதம்

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடல்மட்டம் உயர்ந்ததால் கடல் ஓரங்களில் உள்ள சாலைகளில் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி தளத்திற்கு செல்லும் சாலை, கடல் சீற்றத்தால் மண்அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சியில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், கடல்மட்டம் உயர்ந்ததால் கடல் ஓரங்களில் உள்ள சாலைகளில் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

சாலை மண் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்ததால், அப்பகுதி வழியே செல்லும் சரக்கு வாகனங்களுக்கு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் மண்ணில் மாட்டிக்கொண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

தடுப்புச்சுவர் ஒரு சில இடங்களில் மட்டும் கட்டப்பட்டுள்ளது. சாலை முழுவதும் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்க, கடல் ஓரங்களில் அமைக்க தடுப்பு போன்ற சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

செய்தியாளர்: மனோஜ்குமார்,இராமநாதபுரம்

Tags:Ramanathapuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube