Home / News / local-news /

கன்னியாகுமரி: புனித சவேரியார் ஆலய பத்தாவது நாள் திருவிழா கோலாகலம்

கன்னியாகுமரி: புனித சவேரியார் ஆலய பத்தாவது நாள் திருவிழா கோலாகலம்

The tenth day festival of St.Xaviers Cathedral

The tenth day festival of St.Xaviers Cathedral

கன்னியாகுமரியில் புனித சவேரியார் ஆலய பத்தாவது நாள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி: புனித சவேரியார் ஆலய பத்தாவது நாள் திருவிழா கோலாகலம்

புனிதா சவேரியார் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியில் அமைந்துள்ளது. கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை ஆலயமாக விளங்குகிறது.

இந்த ஆலயம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் புனித சவேரியார். இந்த ஆலயமானது கி.பி. 1600 ஆம் ஆண்டு சிறிய அளவில் நிறுவப்பட்டது. வருடங்கள் பல கடந்த பின் விரிவாக்கம் செய்யப்பட்டு பேராலயம் ஆனது.

இந்த ஆலயத்தில் புனித தேவசகாயத்தின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ஏழை, எளிய மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆலயம் கி.பி 1603 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சார்ந்த பாதிரியார் அந்திரயோசு மரத்தாலும் களிமண்ணால் விரிவாக்கம் செய்தார்.கி.பி 1713 ஆம் ஆண்டு இந்த ஆலயம் கல்லினால் விரிவாக்கம் செய்யப்பட்டது. மே மாதம் 26 ஆம் தேதி 1930 ஆம் ஆண்டு இந்த ஆலயம் கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, கோட்டார் மறைமாவட்டத்தின் பொது பேராலய நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இந்த ஆலயத்தின் திருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறும். இந்தத் திருவிழாவானது பத்து நாட்கள் நடைபெறும். திருவிழாவின் முதல் நாள் அதாவது (நவம்பர் 24) அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

மேலும் பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். மேலும், அப்பகுதியில் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்து இனிப்பு கடைகள், துணிக்கடைகள் போன்ற கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருவார்கள். டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று கடைசி நாள் திருவிழா கொண்டாட்டத்துடன் நிறைவடையும்.

டிசம்பர் மூன்றாம் தேதி கடைசி நாள் இரவு 12 மணியளவில் சப்பரம் எடுத்து புனித சவேரியார் கோயிலை வலம் வருவார்கள். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.200க்கும் அதிகமான காவலர்கள், இரவு முழுவதும் புனித சவேரியார் கோயில் காவல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வெளியூர்களிலிருந்து பக்தர்கள் அநேகர் இதில் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் விழித்திருந்து புனித சவேரியாரே வழிபட்டு சென்றனர்.

செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

377

Tags:Kanyakumari

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube