Home / News / local-news /

கன்னியாகுமரி: ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்காக உணவுத் திருவிழா 

கன்னியாகுமரி: ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்காக உணவுத் திருவிழா 

Food festival in private school to help for the poor children for education.

Food festival in private school to help for the poor children for education.

கன்னியாகுமரியில் ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்காக உணவுத் திருவிழா (Food Festival) நடைபெற்றது.

கன்னியாகுமரி: ஏழை குழந்தைகளின் கல்வி உதவிக்காக உணவுத் திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி அருகே பெல்பீல்டு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியில் இன்று உணவு திருவிழா (Food Festival) நடைபெற்றது.

Feed Nation Foundation தலைமையில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறு சிறு கடைகள் அமைத்து, உணவு மற்றும் அநேகப் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர்.

இந்த இயக்கம் (Feed Nation) படிப்பதற்கு வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் கவனித்து வருகிறார்கள். மேலும், தினசரி தேவைகள் இல்லாமல் தெருக்களில் இருப்பவர்களுக்கு சாப்பாடு வழங்கி வருகிறார்கள்.

இயக்கம் நடத்திய உணவுத் திருவிழா மூலம் வரும் பணத்தை, கல்வி செலவிற்கு உபயோகித்து வருகிறார்கள். எல்லா வருடமும் இந்த பள்ளியில் வைத்து இந்த உணவுத் திருவிழா நடந்து வருகிறது. கனிந்த வருடம் ஊரடங்கு காரணமாக இந்த உணவுத் திருவிழா நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த உணவுத் திருவிழா மூலம் வரும் பணத்தை நேபால் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு கல்வி செலவிற்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த வருடம் பிரம்மாண்டமாக நடந்த இந்த உணவு திருவிழாவில் ஐநூறுக்கும் அதிகமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இங்கே, மதிய உணவு மற்றும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்யப்பட்டது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

377

செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்

Tags:Kanyakumari

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube