Home / News / local-news /

விருதுநகர்: நாளை இருவேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை இருவேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை இரு வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

விருதுநகர்: நாளை இரு வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு

விருதுநகரில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இருவேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் சூலக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மற்றும் ஜி.என்.பட்டி துணை மின் நிலையத்தில் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான ஆமத்தூர், நாட்டார்மங்கலம், வெள்ளூர், சிதம்பராபுரம், செவலூர், காருசேரி, மத்தியசேனை, முத்துலாபுரம், புதுக்கோட்டை, மூளிப்பட்டி, ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சூலக்கரை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சூலக்கரை, கலெக்டர் அலுவலக வளாகம், ஆயுதப்படை குடியிருப்பு, மாடர்ன் நகர், கூரைக்குண்டு, தாதம்பட்டி, கே. செவல்பட்டி, மீசலூர், மாத்திநாயக்கன்பட்டி, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்: அ. மணிகண்டன்- விருதுநகர்

Tags:Virudhunagar

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube