Home / News / local-news /

T.கடம்பன்குளம்: கண்மாயை  உடைத்து நீர்திறப்பு-நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-விவசாயிகள் கவலை

T.கடம்பன்குளம்: கண்மாயை  உடைத்து நீர்திறப்பு-நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-விவசாயிகள் கவலை

கண்மாயை  உடைத்து நீர்திறப்பு-நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-விவசாயிகள் கவலை

கண்மாயை  உடைத்து நீர்திறப்பு-நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்-விவசாயிகள் கவலை

விருதுநகர் அருகே கண்மாய்க் கரையை உடைத்து தண்ணீர் திறந்ததால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட T.கடம்பன்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.

மேலும் T.கடம்பன்குளம் கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக மகிழ்ச்சியடைந்த அப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக T.கடம்பன்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள சின்னக்கண்ணனூர் கண்மாய் நிரம்பியது.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சின்ன கண்ணனூரைச் சேர்ந்த கிராம மக்கள் கண்மாய்க் கரையில் உடைப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், கண்மாய் நீர் முழுவதும் T.கடம்பன்குளம் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்குள் புகுந்தது.மேலும், மூன்று நாட்களாக மெதுவாக வந்து கொண்டிருந்த கண்மாய் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது.

ஏற்கனவே சுமார் 50 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் மீதமுள்ள விவசாய விளை நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வரும் T.கடம்பன்குளம் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே இரண்டு கிராமங்களுக்கும் இடையே கண்மாய் நீர் தொடர்பாக பிரச்சினை இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கண்மாய் கரையின் உடைப்பை சரிசெய்ய வேண்டுமெனவும், நீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் T.கடம்பன்குளம் கிராம விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

377

செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்

Tags:Virudhunagar

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube