Home / News / local-news /

விழுப்புரம்: பள்ளி மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விழுப்புரம்: பள்ளி மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Villupuram: Road safety awareness among school children

Villupuram: Road safety awareness among school children

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதிகள் கடைப்பிடிப்பது, பெண்கள் பாதுக்காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்: பள்ளி மாணவிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தமிழகத்தில் பல பகுதிகளில் சாலை விதிகளை மீறுவதாலும்,பின்பற்றாததாலும் பல விபத்துகள் நேரிடுகிறது. பலர் தங்களின் உயிர் மீது அக்கறை இல்லாமல் பல இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறுவது, வேகமாக வாகனங்களை ஓட்டுவது, தலைக்கவசத்தை அணியாமல் ஓட்டுவது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக இளைய தலைமுறையினர் வாகனங்களில், வேகமாக செல்வது வழக்கமாக உள்ளது. அதுவும், தலைக்கு ஹெல்மெட் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறியும் செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற செயல்களை கண்டிக்கும் வகையில், விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து விதிகள் கடைப்பிடிப்பது, பெண்கள் பாதுக்காப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமையில் இன்று நடைப்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் கொண்டனர். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குறிப்பாக பெண்களுக்கு அவருடைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பேருந்து பயணம் செய்து பள்ளிக்கு வரும்போது படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. வாகனங்களில் வரும்போது பள்ளி மாணவிகளை அழைத்து வருகிறவர்கள், கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வரவேண்டும்.

சைக்கிளில் வரும் மாணவிகள் சாலையை கடக்கும்போது சைக்கிளை விட்டு கீழே இறங்கி நடந்து சாலையை கடக்கவேண்டும். வாகனங்களில் வரும்போது மாணவியின் ஆடைகள் எதிலும் சிக்கிக்கொள்ளாமல், சரியாக உள்ளதா என்று கவனம் தேவை என அறிவுறுத்தினர்.

மேலும் இப்பள்ளிக்கு வருகை புரிந்த சமூக ஆர்வலரான சுரேஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவிகளிடம், மாணவிகள் பயன்படுத்தும் கைப்பேசியினை ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் பயன்படுத்துமாறும், வேறு எந்த செயலுக்கும் பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

377

மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி 12ஆம் வகுப்பு A3 பிரிவு மாணவி வர்ஷா கூறுகையில், “படிக்கும் வயதில் படிப்பிற்கு மட்டும் கவனம் செலுத்த வேண்டும். பின்பு பெற்றோர்களின் நம்பிக்கையை ஏமாற்ற கூடாது. சாலையை கடக்கும் போது கண்டிப்பாக வலதுபுறம் இடதுபுறம், முன்னாடி பின்னாடி என நான்கு திசைகளிலும் வாகனம் வருகிறதா என பார்த்து செல்ல வேண்டும். அதுபோல, எந்த ஒரு அவசர வேலையாக இருந்தாலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக செல்ல வேண்டும். பெண்களின் பாதுகாப்பு குறித்தும் சாலை விதிகளை குறித்தும் அறிவுறுத்துவேன்” என கூறினார்.

பன்னிரண்டாம் வகுப்பு A2 பிரிவு கீர்த்தனா கூறுகையில், “வாகனத்தில் பள்ளிக்கு செல்லும்போது துப்பட்டாவை வாகன சக்கரங்களை மாட்டிக் கொள்ளாத அளவிற்கு அணிய வேண்டும். பேருந்து ஏறும்போது சாலைகளில் அரட்டை அடிக்காமல் ஏற வேண்டும் எனவும், கைபேசினை ஆன்லைன் வகுப்பிற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என பல அறிவுரைகளை வழங்கினார்கள். இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என கூறினார்.

11ஆம் வகுப்பு C 2 பிரிவு கீர்த்தனா கூறுகையில், “நேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த நேரத்தை காட்டக் கூடிய இடம் சாலை அல்ல. முக கவசம் உயிர் கவசம் என்பது தற்போது வந்தது. ஆனால், இதற்கு முன்னர் இருந்த காலங்களில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று உள்ளது. அதனைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நிச்சயமாக இந்த அறிவுரைகளை நானும் பின்பற்றுவேன் மற்றவரையும் பின்பற்ற வைப்பேன்” என கூறினார் கீர்த்தனா.

மேலும் இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினார்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

Tags:Villupuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube