Home / News / local-news /

விழுப்புரம்: நகராட்சி அலட்சியத்தால் நரக வேதனையில் பொதுமக்கள்!

விழுப்புரம்: நகராட்சி அலட்சியத்தால் நரக வேதனையில் பொதுமக்கள்!

Villupuram: Public in hellish torment due to municipal negligence

Villupuram: Public in hellish torment due to municipal negligence

விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு காரணமாக, பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்படாமல் உள்ளதால், நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழுப்புரம்: நகராட்சி அலட்சியத்தால் நரக வேதனையில் பொதுமக்கள்

கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக, விழுப்புரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. கிராமப்பகுதிகளில் மழைநீர் வடிந்து உள்ள நிலையில், விழுப்புரம் நகரப் பகுதியில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு காரணமாக, பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்படாமல் உள்ளதால், நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவ்வாறு, விழுப்புரம் -புதுச்சேரி சாலையில் நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர், லிங்கம் நகர், கே.ஆர்.ஜி. நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களாக தேங்கிய மழை நீர் அகற்றப்படாததால், துர்நாற்றத்துடன் கூடிய கழிவு நீரால், 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் பாதிப்புள்ளாகியுள்ளனர்.

பல நாட்களாக தேங்கியுள்ள மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால், துர்நாற்றம் வீசுவது மட்டுமன்றி நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விஷ ஜந்துக்களும் உள்ளதால் பொதுமக்கள், அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் பள்ளி, கல்லூரிக்கு கூட பிள்ளைகளை அனுப்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தவாறு பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி, கழிவுநீரில் நடந்து ஏணி போட்டு மற்ற வீடுகளுக்கு சென்று தரக் கூடிய அவலநிலை விழுப்புரம் நகராட்சி குடியிருப்பு பகுதியில் நடைபெற்று வருகிறது.

377

இந்த இக்கட்டான சூழ்நிலை பற்றி அம்பிகா கூறுகையில், “பல நாட்களாக இப்பகுதியில் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. எங்களுக்கு என்னவோ அத்தியாவசியப் பொருட்களுக்கும் வழி இல்லை. அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். நாங்கள் புகார் அளித்த பிறகு அதிகாரிகள் ஒரு நாள் மட்டும்தான் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினார்கள். அதன்பிறகு, எந்த ஒரு நடவடிக்கையும் எங்களுக்கு செய்யவில்லை. கர்ப்பிணிப் பெண்ணைக் கூட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பலர் இங்கிருந்து வீடு காலி செய்து உள்ளார்கள். எங்களுக்கு உடனடியாக இந்த தண்ணீரை மட்டும் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கைகூப்பி கோரிக்கை வைக்கிறார் அம்பிகா.

நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

Tags:Villupuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube