Home / News / local-news /

கம்பம்: தொட்டம்மன் துறை கரைகள் சேதம் - தற்காலிக சீரமைப்பு பணிகள்

கம்பம்: தொட்டம்மன் துறை கரைகள் சேதம் - தற்காலிக சீரமைப்பு பணிகள்

Mullai periyaru 

Mullai periyaru 

முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கம்பம் பகுதியில் உள்ள தொட்டம்மன் துறை கரைகளில் வெள்ளநீர் ஒரே பக்கமாக ஒதுங்கி வருவதால், ஆற்றின் ஒரு கரையோரம் முழுவதுமாக பாதிப்பு அடைந்து வருகிறது.

கம்பம் : தொட்டம்மன் துறை கரைகள் சேதம் - தற்காலிக சீரமைப்பு பணிகள்

முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கம்பம் பகுதியில் உள்ள தொட்டம்மன் துறை கரைகள் சேதமடைந்துள்ளதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்து உள்ளனர்.

தொட்டம்மன் துறை :-

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததை அடுத்து, அணையிலிருந்து 2300 கன அடி நீருக்கு மேல் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில், இதர பகுதிகளில் இருந்து மழை நீர் கலப்பதால், முல்லைப் பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

377

இதனால், கம்பம் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்று தொட்டம்மன் துறை பகுதியில், ஒரு கரையோரம் செடிகள் வளர்ந்து தண்ணீர் புகாத அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால், முல்லைப் பெரியாற்றில் வரும் வெள்ள நீர் ஒரு பக்கமாக அடித்துச் செல்கிறது.

வெள்ளநீர் ஒரே பக்கமாக ஒதுங்கி வருவதால், ஆற்றின் ஒரு கரையோரம் முழுவதுமாக பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால், கம்பம் பகுதியில் உள்ள தொட்டமண் துறை மதகுகளும் சேதமடையும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கம்பம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பெயரில் சேதமடைந்த கரையை தற்காலிமாக பலப்படுத்தும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் குறைந்தவுடன் முழுமையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: சுதர்ஸன்

Tags:Cumbum, Theni

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube