Home / News / local-news /

ராமநாதபுரம்: மூத்தோருக்கான தடகள தேர்வு போட்டி

ராமநாதபுரம்: மூத்தோருக்கான தடகள தேர்வு போட்டி

ராமநாதபுரம்: மூத்தோருக்கான தடகள தேர்வு போட்டி

ராமநாதபுரம்: மூத்தோருக்கான தடகள தேர்வு போட்டி

ராமநாதபுரத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் -5) மாநில மூத்தோர் தடகள போட்டிக்கான தேர்வு நடைபெறுகிறது.

மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான 39- வது மூத்தோர் தடகள தேர்வு போட்டியானது, டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு, டிசம்பர் 5 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

காலை 9 மணி அளவில் விளையாட்டு மைதானத்தில் 35 வயது முதல் 70 வயது உடையோர்க்கான பிரிவுகளில் போட்டி நடக்கிறது.

தேர்வு போட்டியில் வெற்றி பெறுவோர் மதுரையில் நடக்க உள்ள, மாநில மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்பார்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட மூத்தோர் போட்டி தேர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பெயர்களை பதிவு செய்ய கீழ்க்கண்ட அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்: 90438 27150, 99420 49549, 81441 42404

அலைபேசியில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்யலாம்.

Tags:Ramanathapuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube