Home / News / local-news /

ராமநாதபுரம்: தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - சிறப்பு வரலாறு

ராமநாதபுரம்: தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - சிறப்பு வரலாறு

ராமநாதபுரம்: தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - சிறப்பு வரலாறு

ராமநாதபுரம்: தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் - சிறப்பு வரலாறு

தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்தின் வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இக்கோபுரம் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள உயர்ந்த கட்டுமானங்களில் முதன்மையாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து கெந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் 10 முதல் 15 ஏக்கர் வரை பரப்பளவு கொண்டு 363 மீட்டரும் 1060 அடிஉயரமும் கொண்டது. இது முற்றிலும் சிமெண்ட் கலவையாலான உயரமான கோபுரம் ஆகும்.

கோபுரமானது 1993-ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி இரண்டு ஆண்டுகள் கட்டுமான பணி நடைபெற்று 1995-ம் ஆண்டு நிறைவடைந்தது. பின்பு இதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கியது பின்பு அகில இந்திய வானொலி நிலைய சேவைகளும் ஒளிபரப்பத் தொடங்கின.

தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் தொடங்கியதால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் தொலைக்காட்சி சேவை தொடங்க ஆரம்பித்தது மற்றும் இலங்கையிலும் சேவை தொடர்ந்தது.

இதன் ஒளிபரப்பு இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் வரையிலும் தொலைக்காட்சி சேவை கிடைக்கும், இதனால் நாட்டிலேயே அதிக பரப்பளவில் ஒளிபரப்பு உருவாகும் நிலையங்களில் ஒன்றாக மட்டுமில்லாமல் இலங்கைக்கும் ஒலிபரப்பு சேவை கிடைத்த சிறப்பு ராமேஸ்வரம் தொலைக்காட்சி நிலையத்திற்கு சிறப்புண்டு.

மீனவர்களுக்கும் பெரும் உதவியாக செயல்படும் தொலைக்காட்சி நிலையம் தொலைக்காட்சி நிலையத்தின் உச்சியில் எரியும் மின்விளக்குகள் லைட் ஹவுஸ் போன்று நினைத்து வழி தெரியாமல் சென்ற மீனவர்கள் சரியாக வழி அறிந்து தரையிறங்க பயன்படும் வகையில் அதன் உச்சியில் உள்ள மின் விளக்குகள் பயன்படுகின்றன.

ஆசியாவிலும் மிக உயரமான ஒளிபரப்பு கோபுரம் ஆகும், ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட இவ்வளவு நீளமா என்று வியப்புடன் பார்த்துச் செல்வார்கள்.

இதன் உள்ளே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது இதன் உச்சியில் நின்று பார்த்தால் ராமேஸ்வரம் முழுவதையும் பார்க்கக்கூடும் என்று தெரிவிக்கின்றன. மண்டபத்தில் இருந்து பார்த்தாலும் கோபுரம் கம்பீரமாக நிற்பது தெரியும்

செய்தியாளர்: மனோஜ்குமார்,இராமநாதபுரம்

Tags:Ramanathapuram

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube