Home / News / local-news /

நாமக்கல்: விவசாயிகள்- வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம்!

நாமக்கல்: விவசாயிகள்- வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம்!

நாமக்கல்: விவசாயிகள்- வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம்!

நாமக்கல்: விவசாயிகள்- வீட்டு உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தேவனாங்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்வதற்காக, கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும்

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் தேவனாங்குறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இதில், பட்டா பெயர் மாற்றுதல், நீக்குதல், கூட்டுபட்டா என பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.

இதில், தேவனாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களுடைய பட்டா தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்து மனுக்களாக எழுதி கொடுத்தார்கள்.

இதுகுறித்து முகாமில் பங்கேற்றவர்களிடம் கேட்டபோது, “இந்த மாதிரியான முகாம் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஏனென்றால், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு கூட வாரக்கணக்கில் நடை நடையாக நடக்க வேண்டி இருக்கும். இன்று நாளை இழுத்துக்கொண்டே செல்வார்கள்.

தற்போது, இதுபோன்ற முகாம் நடைபெற்றால் எளிதில் தங்களுடைய பிரச்சினைகளை தெரிவித்து, தீர்வு காண முடியும். மேலும் தீர்வு காண முடியாதவையும் மனுக்களாக பெற்று செல்கின்றனர்.

இதனால், எங்களுடைய சிரமத்தை குறைப்பதற்கு இதுபோன்ற முகாம்கள் ஒரு தீர்வாக உள்ளது” என்று தெரிவித்தனர்.

377

மேலும் ஒரு நாள் மட்டும் நடத்தி விட்டு செல்லாமல், இதுபோன்ற முகாம்கள் மாதம் ஒரு முறையாவது நடத்தினால், மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்

Tags:Namakkal

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube