Home / News / local-news /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸ்பிரஸ் மேட்டுக்கடை, சின்னப்பன்நாயக்கன் பாளையம், கத்தேரி மற்றும் ஒர்க்ஸ் பீடர்களில் உயர் மற்றும் தாழ்வழுத்த மின் பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குமாரபாளையம், சின்னப்பன் நாய்க்கன்பாளையம், சடையம் பாளையம், டி.வி. நகர், புல்லாகவுண்டம்பட்டி, அக்ரஹாரம், கத்தேரி, சாமியம் பாளையம், தொட்டிபாளையம், கொடாரபாளையம், தட்டாங்குட்டை, எதிர்மேடு, வட்டமலை, கல்லங்காட்டுவலசு, வேமன்காட்டு வலசு, கோட்டைமேடு மற்றும் வளையக் காரனூர் பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும், பள்ளிபாளையம் துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளிபாளையம், வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணாநகர், காடச்சநல்லூர், தாஜ்நகர், ஆயக்காட்டூர், காவிரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை மற்றும் இறையமங்கலம் பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மேலும் ராசிபுரம் வட்டம் நாமகிரிப் பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம், காக்காவேரி, அரியாகவுண்டம்பட்டி.

வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம் பட்டணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:Namakkal

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube