Home / News / local-news /

கோவை: 'ஒமைக்ரான்' எதிர்கொள்ள 5,000 கிட்டுகள் தயார்-  மருத்துவமனை டீன் தகவல்

கோவை: 'ஒமைக்ரான்' எதிர்கொள்ள 5,000 கிட்டுகள் தயார்-  மருத்துவமனை டீன் தகவல்

கோவை: 'ஒமைக்ரான்' எதிர்கொள்ள  5,000 கிட்டுகள்  தயார்-  மருத்துவமனை டீன் தகவல்

கோவை: 'ஒமைக்ரான்' எதிர்கொள்ள  5,000 கிட்டுகள்  தயார்-  மருத்துவமனை டீன் தகவல்

கோவை மருத்துவமனையில் ஒமைக்ரானை எதிர்கொள்ள 5,000 கிட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

\1\6கோவை: 'ஒமைக்ரான்' எதிர்கொள்ள 5,000 கிட்டுகள் தயார்- மருத்துவமனை டீன் தகவல்

கோவை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் போன்ற புதிய வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்ய 5,000 கிட்டுகள் தயார் நிலையில் உள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவையில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு சராசரியாக 100 க்கு குறைவாக உள்ளது. இந்நிலையில், உலக நாடுகளில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறைச் செயலாளருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் நிர்மலா கூறியிருப்பதாவது, " கோவையில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் அதி வேகமாக பரவக்கூடிய தன்மையுள்ள வைரஸ் எனவும் தற்போது கூறப்பட்டுள்ளது. தற்போது, கொரோனாவிற்கு செலுத்தப்படும் தடுப்பூசி எந்த அளவிற்கு பாதுகாப்பு என்பது இன்னும் உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த தடுப்பூசிக்கு முக்கிய பங்கு உள்ளது.

அதேபோல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குதான் அதிக பாதிப்பு மற்றும் இறப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு கோவையில் இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம். இருப்பினும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

டெல்டா வகை வைரஸ் தான் இரண்டாம் அலைக்கு காரணம். அதன்மூலம் இந்த ஒமைக்ரான் மாற்றமடைந்துள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

கோவை அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் பரிசோதனைக்கு தேவையான வசதி உள்ளது. அந்த பரிசோதனையில் அறிகுறி கண்டறிந்தால் , சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி உறுதி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவையில் 5,000 பரிசோதனை கிட் தயார் நிலையில் உள்ளது" என தெரிவித்துள்ளார்.

377

செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை

Tags:Coimbatore

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube