பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி சந்தையில் மஞ்சள் செடி விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் போதுமான அளவு விற்பனை இல்லை . தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதன் காரணமாக முன்கூட்டியே மஞ்சள் செடிகளை எடுத்து வருவதால் விரைவில் வாடி விடுகின்றன.இதனால், சரியான விலைக்கு விற்க முடியவில்லை.
செய்தியாளர்; சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Kanyakumari, Nagercoil