பசுமைமிக்க மாவட்டமாக கன்னியாகுமரி மாறுவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒருமுறை பயன்படுத்தப்பட்டு கழிவாகும் பிளாஸ்டிக் பொருட்கள் இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
உணவகங்கள், கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்வது கட்டாயம். பிளாஸ்டிக் உபயோகப்படுத்தக் கூடாது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு, பொது மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்திற்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
செய்தியாளர்: சார்லஸ் கிப்சன், நாகர்கோவில்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Kanyakumari, Nagercoil