Advertisment

bulletin news

இன்றைய (ஆகஸ்ட் 04) முக்கிய செய்திகளின் தொகுப்பு!

August 04, 2021, 17:45 IST
1. கோவை: திப்பு சுல்தான் படைவீரனின் கனவில் தோன்றிய தண்டுமாரியம்மனின் வரலாறு

கோயம்புத்தூர் அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது தண்டுமாரியம்மன் கோயில். கோயிலின் தோற்றம் தோராயமாக 300 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தக் கோயில் மைசூர்  மன்னன் திப்புசுல்தான் காலத்தில் கட்டப்பட்டது.

தண்டுமாரியம்மன் கோவையின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது. இங்கு துர்கையின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்த்து மக்களின் குலம் தழைக்கச் செய்கிறாள் என நம்பப்படுகிறது.

தற்போது, இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் காட்சி தரும்வகையில் கோயில் அமைந்துள்ளது. மைசூர் மன்னன் திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்க்க, படை திரட்டியபோது, தனது படைகளுடன் கோவை கோட்டைக்குள் முகாமிட்டிருந்தபோதுதான், தண்டுமாரி அம்மன் தனது இருப்பிடத்தை உணர்த்தியதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை, 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்க்க மைசூரில் இருந்து வந்த திப்பு சுல்தான் படைகள் கோட்டையில் முகாமிட்டிருந்தன.

திப்பு சுல்தான் படையில் உள்ள வீரர்களில் ஒரு வீரர் அம்மனை நித்தம் வழிபடும் தீவிர அம்மன் பக்தர். ஒருநாள் இரவில் அவரது கனவில் தோன்றிய மாரியம்மன், வீரர்கள் குடியிருக்கும் பகுதியில், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் தான் நீண்ட காலமாக வசித்து வருவதை உணர்த்தி, தன்னை அங்கேயே வழிபடும்படி கட்டளையிட்டாள்.

கனவில் அம்மனின் அரிய திருமேனியைக் கண்ட அவ்வீரன் மறுநாள் காலையில், அம்மன் வீற்றிருப்பது போல் உணர்த்திய இடத்திற்கு சென்று வேப்பமரம் தொரட்டி மரங்களின் இடையே தேடினான். அப்போது, அங்கே கனவில் கண்ட தெய்வமாக அம்மன் அங்கே வீற்றிருந்தாள். அங்கேயே அம்பாளை வணங்கிய அவர் சக படைவீரர்களுக்கும், கனவில் தோன்றி அருள்புரிந்த அம்மன் வீற்றிருந்த இடத்தை காண்பித்தார். பின், படை வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி அவ்விடத்தில் ஆதியில் சிறிய மேடை போல அமைத்து வழிபட்டனர்.

ஒரு சமயம், பெரும்பாலான வீரர்களுக்கு அம்மை நோய் தாக்கியது. அம்மை விலக அம்பாளை வணங்கி, அருகில் காய்த்திருந்த தண்டுக்கீரையை அரைத்து அதில் உள்ள சாறை பிழிந்து அதனை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு, அத்தீர்த்தத்தைப் அம்மை நோய் பாதித்த அனைத்து வீரர்களும் அருந்தினர்.

அந்த தீர்த்தத்தை பருகிய உடன் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்மை குணமான அதிசயம் நிகழ்ந்தது. இந்த நிகழ்விற்கு பிறகு தண்டுக்கீரையின் பயன்பாடு ஆடி மாதம் தோறும் அம்மனுக்கு கூழ்வார்க்கும் பக்தர்கள் கடைபிடிக்கத் துவங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க்
Advertisment

More from Other District