PREVNEXT
முகப்பு / செய்தி / லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் யாருக்கும் பெயரே கிடையாதாம்... காரணம் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

இந்தியாவில் உள்ள இந்த கிராமத்தில் யாருக்கும் பெயரே கிடையாதாம்... காரணம் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீங்க..!

குழந்தை பிறந்த உடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த ட்யூனை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராகி விடுகிறது.

மேகாலயாவின் விசில் கிராமம்

மேகாலயாவின் விசில் கிராமம்

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) ‘சிறந்த சுற்றுலா கிராமம்’ வரிசையில் மூன்று இந்திய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேகாலயாவின் கோங்தாங், தெலுங்கானாவின் போச்சம்பள்ளி மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள லத்புரா காஸ் ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்தன.

அதில் கோங்தாங் மிகவும் தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது.  அப்படி என்ன பெரிய வித்யாசமான மரபு இருந்துவிட போகிறது என்று கேட்கிறீர்களா? உங்கள் பெயர் என்னவென்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? ராம், ரமேஷ், சுரேஷ்,பாலா, பிரியா, மதி என்றுதானே. ஆனால் இந்த கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு பெயர்களே ட்யூன்கள் தானாம்.

ட்யூன்கள் எப்படி பெயராக இருக்கும்? ஒருவேளை பைரவி, கல்யாணி என்று ராகங்களின் பெயர்களோ என்று நினைத்து விடாதீர்கள். விசிலால் எழுப்பும் ஓசை தான் அவர்களது பெயர்களாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விசில் ஓசைகளை வைத்திருக்கிறார்கள். அதை வைத்து தான் ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள்.

இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு.. மேகாலயாவில் அத்திவேர் பாலம் கொண்ட மாவ்லின்னாங் கிராமத்திற்கு ஒரு பயணம்..!

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோங்தாங் கிராமம், மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 600 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் பெயர்களாக விசில் இசையைக் கொண்டுள்ளதால் கோங்தாங் கிராமம் விசில் கிராமம் அல்லது பாடும் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த இசைப் பெயர்களின் இரண்டு பதிப்புகள் உள்ளன - நீண்ட மற்றும் குறுகிய பெயர்கள். நீளமானது பிறக்கும்போது கொடுக்கப்பட்ட பெயர், மற்றும் அதன் குறுகிய பதிப்பு பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அழகான பாரம்பரியம் ஜிங்ர்வாய் லாபே என்று அழைக்கப்படுகிறது , அதாவது குல  பெண்ணின் பாடல் என்று பொருள். மரபின் படி,  குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாய் தனது குழந்தைக்காக ஒரு ட்யூனை தயார் செய்கிறார். குழந்தை பிறந்த உடன் அதனுடைய காதுகளில் தாய் இந்த ட்யூனை பாடினால் அது உடனே குழந்தையின் பெயராகி விடுகிறது.

377

அந்த ட்யூனை வேறு யாருக்கும் வைக்க முடியாது. அந்த குழந்தைக்கு மட்டும் சொந்தமாகும். அதனால் புதிய புதிய ட்யூன்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்த தனித்துவமான பெயர்களை தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு வைக்க முடியுமாம். அது போக இவர்களுக்கும் தனியாக குடும்ப பெயர்களை சுட்டும் ட்யூன்கள் இருக்கிறதாம். தனிப்பட்ட ட்யூனோடு அதையும் இணைத்துக்கொள்வார்களாம்.

top videos
  • சென்னை வந்த அமித்ஷா - சாலையில் திடீரென விளக்குகள் அணைந்ததால் பரபரப்பு
  • பாதங்களை தொட்டு வணங்க கடமைப்பட்டிருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்
  • பாஜக தமிழ்நாட்டுக்கு என்ன கொடுத்தது தெரியுமா? பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின்
  • இயற்கை பொருட்களை கொண்டு 15 அடி நீளத்தில் மீன் பொம்மை.. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முயற்சி!
  • கோவை மக்களே பள்ளி உபகரணங்கள் வாங்கனுமா? இங்க வாங்க எல்லாமே கிடைக்கும்!
  • அதேபோல சில நேரங்களில் காட்டிற்குள் இருக்கும் போது தங்களுக்குள் பேசி கொள்வதற்கும் இசை மொழிகளை பயன்படுத்துகின்றனர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏதோ விசிலடித்துக்கொண்டு போகிறார்கள் என்று தான் தோன்றும் ஆனால் அவர்கள் ரகசியம் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

    Tags:Meghalaya, Music, Travel, Village

    முக்கிய செய்திகள்