PREVNEXT
ஹோம் / நியூஸ் / லைஃப்ஸ்டைல் /

நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்பதை வைத்து உங்கள் ஆளுமைகளை சொல்லிவிடலாம்... எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்..!

நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்பதை வைத்து உங்கள் ஆளுமைகளை சொல்லிவிடலாம்... எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்..!

நீங்கள் இப்படி உக்காருபவர்களாக இருந்தால்.. துணிச்சலானவராக இருந்தாலும் கூட தேவையான இடங்களில் மட்டுமே உங்களின் சத்தம் வெளிப்படும். உங்கள் வாழ்வில் புதிய நபர்கள் வந்து நுழைய அவ்வளவு எளிதில் இடம் கொடுக்க மாட்டீர்கள்..

உட்காரும் நிலை

உட்காரும் நிலை

நம்முடைய நடத்தைகளே நம்முடைய இயல்பு, குணம் மற்றும் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். இதற்கு முன் நீங்கள் உங்களுடைய தூங்கும் நிலை, பிடித்த உணவுகள் மற்றும் நிறங்கள், விரல் நீளம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் ஆளுமை பண்புகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்பதை பொறுத்து உங்களுடைய குணநலன்கள் அமையும் என்பது உங்களுக்கு தெரியுமா.!! ஆம், நாம் அமரும் போது கால்களை வைத்திருக்கும் நிலை நம்முடைய ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறும் நிபுணர்கள், உட்காரும் போது நமது கால் மற்றும் பாதங்களை எப்படி வைத்து கொண்டு உட்காருகிறோம் என்பதை வைத்து ஆளுமை பண்புகள் இப்படி தான் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கீழ் காணும் பொசிஷன்களில் நீங்கள் எப்படி உட்காருவீர்கள் என்பதை பொறுத்து இங்கே உங்கள் ஆளுமையை தெரிந்து கொள்ளுங்கள்..

அமரும் நிலை 1 :

கீழ் காணும் படத்தில் உள்ளதை போல முழங்கால்களை நேராக வைத்து எப்போதும் அமரும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.?

நீங்கள் அதிக புத்திசாலித்தனமாக செயல்படுபவராக இருப்பீர்கள். உண்மை, தூய்மை மற்றும் நேர்மையை விரும்புபவராகவும் காணப்படுவீர்கள். உங்கள் மீதே நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள், நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்களது ஆளுமை பிறரை எளிதாக கவரும். உங்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கலாம் என்ற எண்ணத்தை பிறருக்கு ஏற்படுத்துவீர்கள். வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையான பார்வையை கொண்டிருப்பீர்கள். நீங்கள் தன்னம்பிக்கையை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். முக்கியமாக ஹார்ட் ஒர்க்கை விட ஸ்மார்ட் ஒர்க்கில் நாட்டம் காட்டுவீர்கள். உங்கள் வீடு, ஒர்க் டெஸ்க், பணியிடம் போன்றவை சுத்தமாக இருக்க விரும்புவீர்கள். குறிப்பாக கிசுகிசுக்களை விரும்ப மாட்டீர்கள். மற்றவர்களை பற்றி பின்னால் பேச மாட்டீர்கள். மோதல் வெடிக்கும் சூழலிலும் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவீர்கள். மேலும் நீங்கள் அமைதியை விருப்புபவர்களாக இருப்பீர்கள்.

அமரும் நிலை 2 :

கீழ் காணும் படத்தில் உள்ளதை போல முழங்கால்களை பிரித்து வைத்து உட்காரும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.?

377

நீங்கள் மிகவும் சுயநலம் கொண்டவராக இருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் சில நேரங்களில் மிகவும் தீர்மானமான மற்றும் செருக்கான ஆளுமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியில் ஓவர் பில்ட்-அப் செய்தாலும் உள்ளுக்குள் பல கவலைகள் ஒளிந்திருக்கும். நீங்கள் பர்ஃபெக்டாக இருக்க விரும்புவீர்கள். எப்போதும் பார்த்தாலும் ஒருவித தயக்கம், குழப்பத்துடனேயே வாழ்வீர்கள். நீங்கள் எப்போதும் பெரிய விஷயங்களில் ஈடுபாடு செலுத்துவதை விரும்புவீர்கள். புதிய விஷயங்கள் மீது ஈர்ப்பு கொண்டிருப்பீர்கள். எளிதில் உங்களை திசை திருப்ப முடியும்.

உங்களது தகவல் தொடர்பு திறன் நன்றாக இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை ஒன்றிணைப்பதில் சிக்கலை எதிர்கொள்வீர்கள். ஒருவர் என்ன பேசுகிறார் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் நீங்கள் அதிகம் பேசுவீர்கள், இது வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். எளிதில் சலிப்படைவீர்கள். உறவுகளில் கடமைகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கலாம். உங்களை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்பட வைக்க குழந்தையை கண்காணிப்பது போல யாராவது உங்களை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய நிலை இருக்கும்.

அமரும் நிலை 3 :

கீழ் காணும் படத்தில் உள்ளதை போல ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு உட்காரும் பழக்கம் கொண்டவர்களா நீங்கள்.?

நீங்கள் எப்போதும் பிரகாசமான யோசனைகள் மற்றும் உயர்ந்த கற்பனைகளை கொண்டிருப்பீர்கள். நீங்கள் மிகவும் விவரமானவராக இருக்கலாம். எனினும் எப்போதும் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் கற்பனையில் தொலைந்து போகலாம். நீங்கள் துணிச்சலானவராக இருந்தாலும் கூட தேவையான இடங்களில் மட்டுமே உங்களின் சத்தம் வெளிப்படும். உங்கள் வாழ்வில் புதிய நபர்கள் வந்து நுழைய அவ்வளவு எளிதில் இடம் கொடுக்க மாட்டீர்கள். நம்பிக்கை சார்ந்த சிக்கல்களை கொண்டிருப்பீர்கள்.

உங்களை யாராவது நிராகரித்து விடுவார்களோ அல்லது ஏமாற்றமடைவீர்களோ என்ற பயத்திலேயே நீங்கள் இருப்பீர்கள். கால்களை குறுக்கே போட்டு உட்காருவது சில நேரங்களில் தற்காப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை மறைப்பதற்காக இப்படி சில நேரங்களில் உட்கார கூடும். அதே நேரம் நிதானமாக உட்கார்ந்து கால்களைக் குறுக்காக வைத்து உட்கார்ந்து பேசுவது நம்பிக்கையுடன் பேசுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

Tags:Personality Test

சிறந்த கதைகள்