PREVNEXT
ஹோம் / நியூஸ் / லைஃப்ஸ்டைல் /

உங்களுக்கே தெரியாமல் வரும் மாரடைப்பு : பிழைத்துக்கொண்டவர்களின் அனுபவங்கள்..!

உங்களுக்கே தெரியாமல் வரும் மாரடைப்பு : பிழைத்துக்கொண்டவர்களின் அனுபவங்கள்..!

ஹார்ட் அட்டாக் என்பது எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று நிகழும் ஒரு பேராபத்து, இதய துடிப்பை நிறுத்தி வாழ்க்கையை முடிகிறது என்று தான் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால் இதில் பாதி உண்மை தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

இதய பாதிப்பு

இதய பாதிப்பு

ஹார்ட் அட்டாக் என்பது எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென்று நிகழும் ஒரு பேராபத்து, இதய துடிப்பை நிறுத்தி வாழ்க்கையை முடிகிறது என்று தான் பெரும்பாலானோர் கருதுகிறார்கள். ஆனால் இதில் பாதி உண்மை தான் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஏனென்றால் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகளில் சம்பவம் நிகழ்வதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்போ அல்லது ஹார்ட் அட்டாக்கின் போதோ ஆபத்து நிகழப்போவதை அல்லது நிகழ்வதை குறிக்கும் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த அறிகுறிகளை கவனித்து எச்சரிக்கையாக செயல்பட்டால் உயிரை காப்பாற்றி விட முடியும். எனினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களுக்கு அட்டாக் ஏற்பட போகிறது என்பதை கண்டறிய முடிவதில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் பற்றிய போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாததே. எனவே உயிருக்கு ஆபத்தான ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை அனைவரும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம். இது உங்கள் உயிரை காப்பாற்ற உதவுவது மட்டுமல்ல, பிறரின் உயிரையும் காப்பாற்ற உதவும்.

நேரடி அனுபவங்கள்:

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட டேவ் பார்க் என்பவற்றின் நேரடி அனுபவம் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். ஹார்ட் அட்டாக்கின் போது தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ள டேவ், 2017-ஆம் ஆண்டில் நான் புல் வெட்டும் இயந்திரத்தை வைத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல தான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனினும் வழக்கத்திற்கு மாறாக சிறிது நேரத்திலேயே அதிக சோர்வாக இருந்தது. திடீரென்று மூச்சுதிணறலும் ஏற்பட்டது, அதிகமாக வியர்த்தது.

Also Read : மது அருந்திய பின் உடலுறவு கொள்வது ஆபத்து... இந்த 5 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

ஏன் நமக்கு திடீரென்று இப்படி ஏற்படுகிறது என்று சற்று குழப்பத்தில் ஆழ்ந்தேன். எனினும் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் வேலையே தொடர்ந்தேன். நேரம் செல்ல செல்ல மூச்சுத் திணறல் மற்றும் வியர்த்து கொட்டுவது இன்னும் அதிகரித்தது. எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக நெஞ்சில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல கனமான உணர்வு மற்றும் வலி ஏற்பட துவங்கியது. இந்த நிலையான வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருந்தது.

தொடர்ந்து என் நடு முதுகில் பயங்கர வலியை உணர்ந்தேன். பின் இரு கைகளின் பின்புறமும் குறிப்பாக வலதுபுறத்தை விட இடதுபுறம் கையில் வலி சற்று அதிகமாகவே இருந்தது. தீவிர அறிகுறிகளை தொடர்ந்து செயல்பட முடியாமல் தரையில் சரிந்து விழுந்தேன். இதனை தொடர்ந்து என் மனைவி என்னை அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தார். 45 நிமிடங்களுக்குள் வலி நீங்கியது. இந்த நேரத்தில் எனது ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்தது.

377

சீரான இடைவெளியில் ரத்தம் எடுத்து பரிசோதித்தனர் எனது கார்டியாக் ட்ரோபோனின் அளவுகள் அதிகரித்ததை மருத்துவர்கள் கண்டார்கள். இதய துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் சீராக்க சிகிச்சை அளித்தனர். வாசோடைலேட்டர் காரணமாக எனக்கு இரண்டரை நாட்கள் கடும் தலைவலி ஏற்பட்டது. மீண்டும் ICU க்கு மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டேன். அப்போது ​​​​ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும் பேலன்ஸ் மருந்துகள் கொடுக்கப்பட்டன என்றார். இறுதியில் சர்ஜன் பரிசோதித்த போது எனக்கு 95% அடைப்பு இருந்தது. இதனை அடுத்து ஹைப்ரிட் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது என்றார்.

Also Read :  நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு இப்படியொரு பாதிப்பா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட பதிவு..!

இதனிடையே சூசன் லாங் என்ற பெண் Quora யூஸர் தான் அனுபவித்த ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் சற்று வேறுபட்டவை என தான அனுபவம் பற்றி கூறினார். இரவு 11 மணியளவில் என் இடது மார்பகத்திற்கு சற்று மேலே அஜீரணம் கோளாறு ஏற்பட்டதை போல் உணர்ந்தேன். எனவே ஏப்பம் விட்டு அதை சரி செய்ய முயற்சித்தேன். அப்போதும் சரியாகவில்லை. சரி படுக்கலாம் என்று முயற்சித்த போது அந்த அசௌகரிய உணர்வு கிட்டத்தட்ட என் தொண்டைக்கு நகர்ந்தது.

தொடர்ந்து வியர்ப்பது அதிகரித்தது. உடனே ஏதோ ஆபத்து என்பதை உணர்ந்து ஆம்புலன்ஸிற்கு கால் செய்தேன். அதிலிருந்து துணை மருத்துவர் எனது அறிகுறிகள் ஹார்ட்அட்டாக்கை போல இருப்பதாக கூறினார். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது எனக்கு நெஞ்சு வலி அல்லது அழுத்தம் ஏதும் இல்லை. வழக்கத்திற்கு மாறாக திடீரென வியர்வை அதிகமாகாவிட்டால் நான் நிச்சயம் ஆம்புலன்சிற்கு கால் செய்திருக்க மாட்டேன் என்றார்.

ஹார்ட் அட்டாக்குடன் தொடர்புடைய அறிகுறிகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மாறுபடும் என்று நிபுணர்கள் கூறுவதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் மார்பில் அறிகுறிகளை அனுபவித்தாலும் மூச்சுத் திணறல், முதுகு வலி, அஜீரணம் போன்ற வித்தியாச அறிகுறிகளை பெண்கள் அனுபவிக்கின்றனர். மற்றொரு நெட்டிசன் (வயது 38) தனது ஹார்ட்அட்டாக் அனுபவம் பற்றி ஷேர் செய்ததாவது, முதல் நாள் இரவு மார்பெலும்பு பகுதியில் ஏதோ சிக்கி இருப்பது போன்று அசௌகரியம் ஏற்பட்டது போல் உணர்ந்தேன்.

அடுத்த நாள் அப்பகுதியில் கடும் அழுத்தம் மற்றும் வலி காணப்பட்டது. கேஸ்ட்ரோ தொடர்பான சிக்கலாக இருக்கும் என நினைத்து மருத்துவமனைக்கு சென்றேன். தீவிர அறிகுறிகள் இல்லாததால் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டேன். தொடர் பரிசோதனையில் எனக்கு மேஜர் அட்டாக் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. பிறகு தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து ஃபுல் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது என கூறி இருக்கிறார்.

 

Tags:Heart attack

சிறந்த கதைகள்