பல வயதானவர்கள் தாங்கள் இளமையாக இருந்தபோது உடற்பயிற்சி செய்ததை விட வயதானவுடன் குறைவாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால், இதில் நாம் ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில், நீங்கள் வயதாகும்போது உடற்பயிற்சி செய்வதற்கு இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நீங்கள் ஒரு வலுவான வாழ்க்கையை உருவாக்கலாம்.
60 வயதிற்குப் பிறகு ஒரு பாடிபில்டரின் உடலமைப்பை பெறுவதில் நீங்கள் அவ்வளவு அக்கறை காட்டாமல் இருக்கலாம், ஆனால் எலும்புகள் மற்றும் மூட்டுகள் பலவீனமடைவதை உங்களால் தடுக்க முடியும். மேலும், நீண்ட காலத்திற்கு முன், மாடிப்படி ஏறுவது போன்ற அன்றாட பணிகளை ஒரு சவாலான பணியாக உணரலாம். 60 வயதிற்குப் பிறகும் உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும். அதற்கான சில உடற்பயிற்சிகள் இங்கே.
புல் அப்ஸ் ஒரு கிளாசிக் உடற்பயிற்சி ஆகும். அது உடலில் லாட்ஸ், டெல்ட்ஸ், ட்ரைசெப்ஸ், முதுகு ஆகியவற்றை ஒரே நேரத்தில் குறிவைக்கிறது. உங்கள் உடல் எடையை பொறுத்து இந்த உடற்பயிற்சி எளிதாக அமையும். இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பிடியைப் பொறுத்து வெவ்வேறு தசை பகுதிகளை நீங்கள் குறிவைக்கலாம். ஒரு நெருக்கமான பிடியில் பைசெப்ஸ் மற்றும் வெளிப்புற லாட்ஸ் மீது அதிக கவனம் செலுத்தப்படும், அதே நேரத்தில் ஒரு அகண்ட பிடியில் உங்கள் உறுப்புகள் அதிகமாக வேலை செய்யும்.
Must Read | உடல் எடையைக் குறைக்க தினமும் செய்யவேண்டிய மூன்று விதமான சிம்பிள் வொர்க் அவுட்ஸ்!
ஸ்குவாட்ஸ் (Squats):
சுறுசுறுப்பாக ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்வது வழக்கமான சமநிலையை அமைத்து, உங்கள் உடலை வலுப்படுத்தி, எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி, டிமென்ஷியாவை தடுக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஸ்குவாட்ஸ் எப்போதுமே செய்வதற்கு எளிது என்றாலும், அதில் பல நுணுக்கங்கள் உள்ளன. இந்த உடற்பயிற்சியின் கால் தசை கட்டும் நன்மைகள் எந்தவொரு உடற்பயிற்சியின் இன்றியமையாத பகுதியாக அமைகிறது. இந்த உடற்பயிற்சி கால்கள் மற்றும் கீழ் உடலில் தசையை வலுப்படுத்த முக்கியமாகும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சமநிலைக்காக நாற்காலியின் பின்புறத்தை பிடித்து ஸ்குவாட்ஸ் செய்வது சிறந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரோயிங் (Rowing):
ரோயிங் இயந்திரம் உடற்பயிற்சி தொடங்குபவர்களுக்கு மிகவும் கடினமாக தோன்றும். ஆனால், சில காரணங்களுக்காக, தசையை உருவாக்க விரும்பும் வயதானவர்களுக்கு இது சிறந்தது. ரோயிங் பயிற்சி குறைந்த தாக்கத்தை கொடுத்து உடலின் தசைகளில் 85 சதவிகிதம் வேலை செய்கிறது. அதாவது, எலும்புகளை அதிகம் பலப்படுத்தப்படுகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Healthy Lifestyle, Physical exercise