அதிக கொலஸ்ரால் என்பது சத்தமே இல்லாமல் நம் உயிரை பறிக்கும் ஆபத்தான நோய். இதை சரியான நேரத்தில் கண்டறிந்து சரி செய்யாவிட்டால் இது தீவிரமான நோய்க்கு வழி வகுக்கும். ஏன் மரணத்திற்கே கொண்டு செல்லும். அப்படி உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது நேரடியாக பாதிக்கப்படுவது இதயம்தான்.
எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில் கொலஸ்ட்ராலை சீராக வைத்துக்கொள்வது அவசியம். அப்படி உங்கள் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரித்துவிட்டது எனில் அது சில ஆரம்ப அறிகுறிகளை வெளிப்படுத்து. அந்த சமயத்தில் நாம் விழித்துக்கொண்டால் பேராபத்துகளை தவிர்க்கலாம். அப்படி அது காட்டும் சில அறிகுறிகளில் முக்கியமானது கால்களில் தெரியும் அறிகுறிகள்தான்.
கவனிக்கப்படாமல் அதிகரிக்கும் கொழுப்பின் அறிகுறிகள் தமனிகளில் பிளேக் உருவாக்கத்தை அதிகரிக்கும். பிளேக் என்பது கொழுப்பு சேர்ந்த ஒரு அடர்த்தியான திரவமாகும். அப்படி தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்போது அது குறுகிய வடிவமாக மாறும். அவ்வாறு சுருங்கும்போது உடலின் இரத்த ஓட்டத்தை வெகுவாக பாதிக்கிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு சீரான இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. இதனால் உண்டாகும் முதல் அறிகுறிதான் காலில் தென்படும். இதற்கு புற தமனி நோய் (peripheral artery disease (PAD)) என்று பெயர்.
அப்படி கால்களில் இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது உங்களுக்கு கால் பிடிப்பு பிரச்சனை அடிக்கடி ஏற்படும். ஏனினில் கால் தசைகளுக்கு இரத்த ஓட்டம் கிடைக்காத போது அவை சுருங்கத் தொடங்குகின்றன. அப்படி நீங்கள் கால்களை இழுத்து நீட்டும்போது கிளச் கொண்டு உங்கள் தசைகளை இழுத்துப்பிடிப்பதுபோல் இருக்கும். அந்த சமயத்தில் தாங்கமுடியாத வலியை உணர்வீர்கள்.
அதேபோல் நீங்கள் திடீரென சுருசுருப்பாக இயங்குபோதும், உடனே அதை நிறுத்தும்போதும் ஓய்வில் இருக்கும்போது திடீரென கால் தசைகள், நரம்புகள் இழுத்துப் பிடிப்பதுபோல் வலியை உணர்த்தும். சில நேரங்களில் பொதுவான இரத்த ஓட்டம் தடைபடும்போதும் இவ்வாறு நிகழலாம். சில நேரங்களில் அது கொழுப்பு அடைப்பின் காரணமாக இரத்த ஓட்டம் இல்லாமல் போகும்போதும் நடக்கலாம். நீங்கள் இவ்வாறு அடிக்கடி உணர்கிறீர்கள் எனில் அது கொலஸ்ரால் பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவரை அணுகி உறுதி செய்வது நல்லது.
Also Read : அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதால்தான் சர்க்கரை நோய் வருகிறதா..?
கொலஸ்ரால் காரணமாக தசை பிடிப்பு உண்டாகிறது என்பதை உறுதிப்படுத்தும் அறிகுறிகள் :
கால்களில் வலி அல்லது அசௌகரியம் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. எனவே அதற்கு கொலஸ்ட்ரால்தான் காரணமா என்பதை உறுதி செய்ய சில வழிகள் உள்ளன. அதாவது நீங்கள் ஆக்டிவாக இருக்கும்போது கால்களின் பின்புறும் இறுக்கி பிடிப்பதும் பின் ஓய்வில் இருக்கும்போது சரியாவது மீண்டும் ஆக்டிவாகும்போது பிடிக்கிறது என இருந்தால் அது PAD தொடர்பான கொலஸ்ட்ரால் பிரச்சனையாக இருக்கலாம். இந்த சமயத்தில் பலவீனமாகவும், சோர்வாகவும் , வலியுடனும் உங்கள் கால்கள் இருக்கும்.
அடுத்ததாக ஓய்வில் இருக்கும்போது கால் பாதங்களில் எரிச்சல் உணர்வு, வலி , கால் கட்டை விரல்களில் வலி இருக்கிறது, குறிப்பாக இரவு தூங்கும்போது வலிக்கிறது எனில் அதற்கு PAD காரணமாக இருக்கலாம். சருமத்தில் சிவப்பாக மாறுதல், நிறம் மாற்றம், அடிக்கடி கால்களில் தொற்று , புண் விரைவில் ஆறாமல் இருப்பது போன்றவையும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் உண்டாகும் அறிகுறிகளாகும்.
சில நேரங்களில் கொலஸ்ட்ரால் இல்லாமலும் சில காரணங்களுக்காகவும் கால் பிடிப்பு ஏற்படலாம். அப்படி
- தசையை அதிகமாகப் பயன்படுத்துதல்
- நீரிழப்பு
- தசை திரிபு
- நீண்ட நேரமாக ஒரே இடத்தில் காலை மடக்கி வைத்தல்
- உடற்பயிற்சி
- தாதுச் சிதைவு
- நரம்பு சுருக்கம்
போன்றவற்றின் காரணமாகவும் கால் பிடிப்பு உண்டாகலாம்.
பரிசோதனை அவசியம் : எனவே உங்களுக்கு அடிக்கடி கால் பிடிப்பு ஏற்படுவதற்கு கொழுப்பு காரணமா அல்லது வேறேதேனும் காரணமா என தெரிந்துகொள்ள பரிசோதனை அவசியம். எந்த காரணமாக இருந்தாலும் அதை கண்டறிந்து சரி செய்வதே அவசியம்.
எனவே கொலஸ்ட்ராலை தெரிந்துகொள்ள வேண்டும் எனில் இரத்தப்பரிசோதனை அவசியம். அதற்கு மருத்துவர்கள் உங்கள் கைகள் அல்லது விரல்களிலிருந்து இரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்வார்கள்.
Also Read : உடல் எடையை குறைக்க நல்ல ஜிம் தேடிட்டு இருக்கீங்களா..? சரியான ஜிம்-ஐ தேர்வு செய்ய 5 கோல்டன் ரூல்ஸ்...
அவ்வாறு செய்தபின் அது கொலஸ்ட்ரால் என உறுதியானதும் மருத்துவர் தரும் மாத்திரைகளை தாண்டி நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
அப்படி கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். காய்கறிகள் , தானிய வகைகள், பருப்பு வகைகளில் கவனம் செலுத்துங்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கால்களுக்கு ஸ்ட்ரெச் கொடுத்தால் தசைகள் இலகுவாகும். இரத்த ஓட்டம் கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Cholesterol, Leg Pain