PREVNEXT
ஹோம் / நியூஸ் / லைஃப்ஸ்டைல் /

எலுமிச்சை ஊறுகாயில் ஒளிந்திருக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இதோ..! 

எலுமிச்சை ஊறுகாயில் ஒளிந்திருக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் இதோ..! 

எலுமிச்சை ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய்

Lemon Pickle Benefits | எலுமிச்சை ஊறுகாயின் ஆரோக்கிய நன்மைகள் பல என்றாலும் உங்கள் உணவில் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

பொதுவாக இந்திய உணவுகள் என்று வரும் போது, நம் நினைவுக்கு வரும் முதல் விஷயம் ஸ்ட்ராங் டேஸ்ட் கொண்ட உணவுகள் தான். நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் ஸ்ட்ராங் மசாலா கொண்டு சற்றே காரமாக தயாரிக்கப்படுகின்றன.

ஒருவேளை சாப்பிடும் உணவு காரமானது இல்லை என்றால் கூடுதல் சுவைக்காக ஊறுகாய்களை மசாலாவாக உணவுகளின் போது பயன்படுத்துகிறோம். இன்னும் சொல்ல போனால் பல இந்தியர்களுக்கு தட்டில் ஊறுகாய் வைக்காவிட்டால் அவர்களின் சாப்பாடு முழுமையடையாதது போல் உணர்வார்கள். மாங்காய், பூண்டு, ஆவக்காய் உள்ளிட்ட பல ஊறுகாய்களுக்கு மத்தியில் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் எலுமிச்சையை கொண்டு தாயரிக்கப்படும் ஊறுகாய் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

மற்ற எல்லா வகை ஊறுகாய்களை விட எலுமிச்சை ஊறுகாய் ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்றாகும். எலுமிச்சை ஊறுகாயின் ஆரோக்கிய நன்மைகள் பல என்றாலும் உங்கள் உணவில் எலுமிச்சை ஊறுகாயை சேர்த்து கொள்வதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...

எலுமிச்சை ஊறுகாயில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலின் தேவையை பூர்த்தி செய்ய உதவுகின்றன. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் புரோபயாடிக் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன.

Also Read : பச்சை மிளகாய் மட்டும் வைத்து ஸ்நாக்ஸா..? செஃப் சரண்ஷ் குக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்!

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது:

எப்போதும் வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால் நம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்து கொள்வது அவசியமாகிறது. எலுமிச்சை ஊறுகாயில் இயற்கையிலேயே ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் கெட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் பி அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.

இதய ஆரோக்கியம்:

377

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க எலுமிச்சை ஊறுகாய் உதவுகிறது. ஏனென்றால் இது கிட்டத்தட்ட ஜீரோ ஃபேட் மற்றும் கொலஸ்ட்ரால் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Also Read : மைதா இல்லாமல் கேக் செய்ய முடியுமா..? உங்களுக்காக அந்த இரகசியம்..!

கர்ப்பகாலத்தில்..

கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது என்று பல வகை உணவுகளுக்கு கட்டுப்பாடு இருந்தாலும், ஆச்சரியமூட்டும் விதமாக கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மிதமான அளவு எலுமிச்சை ஊறுகாயை எடுத்து கொள்ளலாம். ஏனென்றால் எலுமிச்சை ஊறுகாயில் நல்ல அளவு உப்பு மற்றும் எண்ணெய் இருக்கிறது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும். ஆனால் மிதமான அளவே சாப்பிட வேண்டும்.

எலும்பு ஆரோக்கியம்:

பொதுவாக வயது ஏற ஏற நமது எலும்புகளின் ஆரோக்கியம் மோசமாகிறது. இரும்புச்சத்து மற்றும் கால்சியம் பற்றாக்குறை காரணமாக நம் எலும்புகள் குறிப்பாக பெண்களின் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்புகள் பலவீனமாவதை தவிர்க்க முக்கிய வைட்டமின்கள் மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். எலுமிச்சை ஊறுகாயில் காணப்படும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்டவை எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன.

Also Read : கர்ப்பிணிகள் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது:

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனித உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் சரியான அளவு ரத்த ஓட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனையும் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக்களையும் ரத்தம் கொண்டு செல்கிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீரற்ற தன்மை உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்த கூடும். இவை இரண்டும் ஆபத்தானவை, எனவே உங்கள் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் தினமும் உங்கள் டயட்டில் சிறிதளவு எலுமிச்சை ஊறுகாயை சேர்த்து கொள்ளலாம். இதில் காப்பர், பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது.

Tags:Health Benefits, Lemon, Pickle

சிறந்த கதைகள்