PREVNEXT
ஹோம் / நியூஸ் / லைஃப்ஸ்டைல் /

இந்த சமையல் எண்ணெய்யில் இத்தனை நன்மைகளா.? 

இந்த சமையல் எண்ணெய்யில் இத்தனை நன்மைகளா.? 

சமையல் எண்ணெய்

சமையல் எண்ணெய்

Benefits of Blended Cooking Oils | கலவை எண்ணெய் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட எடிபுள் ஆயில்களின் கலவையை பயன்படுத்துவதால் உடலுக்கு என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என பார்க்கலாம்...

உணவின் ருசிக்கு மட்டுமல்ல உடலின் ஆரோக்கியத்திலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் பங்களிப்பு முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. உடலுக்குத் தேவையான கொழுப்பு சத்தை வழங்குவதிலும் சமையல் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது.

குறிப்பாக கொழுப்பு உடலில் ஆற்றலைச் சேமித்தல், மூட்டுகளின் செயல்பாடுகள், முக்கிய உறுப்புகளுக்கான பாதுகாப்பு, ஹார்மோன் உற்பத்தி போன்ற முக்கிய செயல்பாடுகளில் பங்களிக்கிறது. கூடுதலாக, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இரத்தம் உறைதல் மற்றும் மூட்டுகள், திசுக்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. கொழுப்புகள் நரம்பு தூண்டுதல் பரிமாற்றம், நினைவக சேமிப்பு மற்றும் திசு கட்டமைப்பை நிலைநிறுத்த உதவுகின்றன.

இதுபோதாது என்று சமீபகாலமாக மல்டி சோர்ஸ் அல்லது கலவை எண்ணெய்களின் உபயோகம் அதிகரித்து வருகிறது. அதேபோல் உணவில் உள்ள கொழுப்பை குறைப்பதில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், கொழுப்பைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், உணவில் உள்ள கொழுப்பின் தரத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பலனை கலவை எண்ணெய்கள் மூலமாக பெற முடியும்.

உதாரணத்திற்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக கலவை எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்துவோர் நேர்மறையான மாற்றங்களை உணருவதாக தெரிவிக்கின்றனர். கலவை எண்ணெய்க்கு மாறுவது சிறந்த மனநலம், சுறுசுறுப்பு, அதிக ஆற்றல் மற்றும் சிறந்த தோல் மற்றும் முடி ஆரோக்கியம் போன்றவற்றை வெளிப்படையாக பார்க்கமுடியும்.

எனவே கலவை எண்ணெய் எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட எடிபுள் ஆயில்களின் கலவையை பயன்படுத்துவதால் உடலுக்கு என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கிறது என பார்க்கலாம்...

Also Read : திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள் : தெரிந்துகொண்டால் தினமும் சாப்பிடுவீங்க...

1. இதய ஆரோக்கியம்:

இதய நோய்க்கும், கொழுப்பிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி அறிந்து கொள்ள பல ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நிறைவுற்ற கொழுப்பை அதிகமாக உட்கொள்வது கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் கலவை எண்ணெய்யில் பாலி மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் விகிதம் சிறப்பாக இருப்பதால், இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

377

2. அதிக ஸ்மோக் பாயிண்ட்

சாதாரண சமையல் எண்ணெய்களை அடிக்கடி அதிக அளவில் சூடுபடுத்துவது உடல் பருமன், இதய பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிரச்சனைகளைக் கூட கொண்டு வரக்கூடும் எனக்கூறப்படுகிறது. எனவே இந்திய சமையலுக்குத் தேவையான அதிக கொதிநிலையை கலவை எண்ணெய் கொண்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதனால் எண்ணெய்யின் ஊட்டச்சத்துக்கள் உணவு மூலமாக அப்படியே கிடைக்கிறது.

Also Read : உடல் எடையை வேகமாக குறைக்க டயட்டில் இந்த 4 விஷயங்களை மாத்துங்க..! 

3. கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல்:

கலவை எண்ணெய்களில் உள்ள கொழுப்பு அமிலங்களின் விகிதம் கெட்ட கொழுப்பைக் (LDL) குறைக்கவும், நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கவும் உதவுகிறது. இது இதயத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

4. அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

சாதாரண எண்ணெய்களுடன் ஒப்பிடுகையில், பல வகையான எண்ணெய்களைக் கொண்ட கலவை எண்ணெய்யில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு தவிடு, குங்குமப்பூ போன்ற எண்ணெய் வகைகளுடன் ரைஸ் பிரான், வெஜிடபுள் ஆயில் போன்ற எண்ணெய்களை கலக்கும் போது அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகரிப்பது ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

Also Read : ஊதா நிற தக்காளியில் இத்தனை நன்மைகளா..? நிபுணர்கள் சொல்வது என்ன.? 

5. மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து:

கொழுப்பின் சீரான விகிதங்களைத் தவிர, 2 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணெய்களைக் கலப்பது ஒரு எண்ணெய்யில் பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பைட்டோநியூட்ரியன்களை வழங்குகிறது.

ஓரிசானோல் (Oryzanol), டோகோபெரோல் (Tocopherol) மற்றும் டோகோட்ரினோல் (Tocotrienol) ஆகியவை அடிப்படை ஊட்டச்சத்துக்களையும் கடந்து, ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இருதய கோளாறுகள், மற்றும் டிஸ்லிபிடெமியா, இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.

Tags:Cooking Oil, Healthy Food

சிறந்த கதைகள்