Varicocele Symptoms : இன்றைக்கு பெயர் தெரியாத புதிய நோய்கள் நமக்கு மனதளவிலும், உடல் அளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இவ்விருவருக்கும் வித்தியாசமாக பல நோய்கள் ஏற்படுவதுண்டு. இதில் சில நோய்கள் ஆரம்ப கால அறிகுறிகள் எதுவும் இல்லாமலே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதில் ஒன்று தான் வெரிகோசெல்ஸ் எனப்படும் ஆண்களின் விரைப்பையில் ஏற்படும் ஒரு விதமான நோய். முதலில் வெரிகோசெல்ஸ் என்றால் என்ன? என இங்கு தெரிந்து கொள்வோம்..
வெரிகோசெல்ஸ் நோய் பாதிப்பு கால்களில் ஏற்படும் சுருள் சிரை நாளங்களைப் போன்று ஆண்களில் விரைப்பையில் ஏற்படும் பாதிப்பாகும். இது விந்தணுக்களை வைத்திருக்கும் ஸ்க்ரோட்டத்தில் உள்ள நரம்புகளின் விரிவாகத்தின் நிலையைக் குறிக்கிறது. மேலும் ஒரு வெரிகோசெல் என்பது புழுக்களின் பை போல் தோன்றுவது எனவும், இந்த பாதிப்பு எப்போதும் இடது பக்கத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அறிகுறிகள் என்ன..?
குறிப்பாக ஐரோப்பாவில் ஆரோக்கியமான ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில், கிரேடு 1 வெரிகோசெல் உள்ள ஆண்களிடமும் கூட விந்தணுக்களின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் கூறுகிறது. இந்த நோய் பாதிப்பு இன்றைக்கு இளைஞர்களைப் பெருமளவில் பாதிப்படைய செய்கிறது. பொதுவாக எப்போது விரைப்பையின் இடது பக்கத்தில் தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Also Read : UTI Infection : வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டுகள் சிறுநீர் பாதை தொற்றை ஏற்படுத்துமா..? தவிர்க்கும் வழிகள்..!
இந்த நோய் பாதிப்பை நீங்கள் சந்திக்கிறீர்கள் என்றால், சில அறிகுறிகள் பொதுவானதாக இருக்கும். குறிப்பாக நோயாளிகள் விரைப்பை வலியை அனுபவிக்க நேரிடும். இதோடு பாதிக்கப்பட்ட நரம்புகள் மீது அதிக அழுத்தம் ஏற்படும் போது நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நிற்கும் போது அதிக வலியை நீங்கள் உணர்வீர்கள்.
இதை நீங்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டீர்கள் என்றால், இந்த நரம்புகள் மற்றவைகளை விட பெரியதாக தோன்றும். மேலும் சில நாள்களுக்குப்பிறகு அதிக வலியை உங்களுக்கு ஏற்படுத்தும். இந்த நேரங்களில் மல்லாந்து படுத்தால் மட்டுமே உங்களுக்கு நல்ல தீர்வாக இருக்கும்
குறிப்பாக நரம்புகளில் இரத்தம் தேங்குவது மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுப்பொருள்களுக்கு டெஸ்டிகுலர் செல்கள் நீண்ட நேரம் வெளிப்படுவதே வெரிகோசெல் பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. எனவே மேற்கண்ட அறிகுறிகள் எதுவும் இருந்தால் ஆரம்பத்திலே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று சிகிச்சை பெற்றுக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Intimate Hygiene, Men Health