• Home
  • »
  • News
  • »
  • lifestyle
  • »
  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி...

விநாயகர் சதுர்த்தி என்றாலே பூரணம் கொழுக்கட்டைதான் முதல் நெய்வேத்தியமாக அளிக்கப்படும். அந்த வகையில் இனிப்பான பூராணம் வெள்ளைக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... பிள்ளையாருக்குப் பிடித்த பூரணம் கொழுக்கட்டை ரெசிபி...
வெள்ளை கொழுக்கட்டை

விநாயகருக்கு பூரணம் கொழுக்கட்டை என்பதே பிரதான நெய்வேத்தியம் ஆகும். அதனால் விநாயகர் சதுர்த்தி அன்று அனைவரது வீட்டிலும் தவறாமல் செய்யப்படும் ஒரு பலகாரம் இந்த வெள்ளை கொழுக்கட்டை. இதனை பூரண கொழுக்கட்டை என்றும் சொல்லலாம்.  இதனை வீட்டில் எவ்வாறு எளிமையாக செய்யலாம் என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு - 1கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன்

வெல்லம் - 1 கப்

தேங்காய் - 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

377

நெய் - 1 டீஸ்பூன்

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...?

பூரணம் செய்ய:

ஒரு முழு தேங்காயைத் துருவி வாணலியில் லேசாகத் வறுத்துக் கொள்ளவும். அத்துடன் ஒரு கப் எள்ளை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து வைக்கவும். அதனைத் தொடர்ந்து கால் கிலோ வெல்லத்தை பொடிக்கவும். முதலில் எள் மற்றும் தேங்காய் துருவலை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றவும். இரண்டும் ஒன்றிரண்டாக பொடிந்த பின், வெல்லத்தை சேர்க்கவும். நீர் எதுவும் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றவும். இப்போது இனிப்புக்கு பூரணம் கலவை தயார். விரும்பினால் ஏலக்காய் சேர்க்கலாம்.

மேலும் படிக்க... கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்... தட்டு வடை ரெசிபி...

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும். தேவையான அரிசி மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கிளற மரக் கரண்டியை எடுத்துக் கொள்ளவும். மாவு மூழ்கும் அளவுக்கு நீரை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளற வேண்டும்.

கிளறிய மாவு சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக உருட்டி, நடுவில் குழிபோல செய்து அதனுள் இனிப்பு கலவையை வைக்க வேண்டும்.  இப்படி தேவையான உருண்டைகளை செய்து வைக்கவும். பின்னர் செய்து வைத்த உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து 3 அல்லது 4 நிமிடம் வேக வைத்தால்  சுவையான இனிப்பு பூரணம் கொழுக்கட்டை தயார்...

மேலும் படிக்க... விநாயகருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

Published by:Vaijayanthi S
First published:August 28, 2021, 10:23 IST

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube