பொதுவாக கிராமங்களில் கறிக்குழம்பு என்றாலே ஆட்டுக்கறி குழம்புதான். அசைவப் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று மட்டன். அந்த மட்டனில் பாட்டிமார்களின் ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - ½ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பட்டை -1 துண்டு
லவங்கம் - 2
கசகசா - 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் நன்றாக கறியை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கறியில் தேவையான அளவு தண்ணீர் சிறிது சீரகம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு என அனைத்தையும் தனித்தனியே போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்களுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மீண்டும் பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, என அனைத்தையும் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். அத்துடன் வேகவைத்த ஆட்டுக் கறியை சேர்த்து வதக்கவேண்டும்.
இப்போது அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து எண்ணெய் நன்கு திரண்டுவரும் வரையில் கொதிக்கவைக்க வேண்டும். நன்கு கொதித்த பிறகு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லியை தாளித்து விட்டு இறக்கினால் சுவையான கிராமத்து பாட்டி செய்யும் கறிக்குழம்பு ரெடி.
மேலும் படிக்க... மட்டன் கீமா செய்வது எப்படி?
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Food, Mutton recipes