Home / News / lifestyle /

சாரா அலிகான் விரும்பி சாப்பிடும் உணவுகள்... எந்த ஊர் சென்றாலும் இவைதான் ஃபேவரெட்

சாரா அலிகான் விரும்பி சாப்பிடும் உணவுகள்... எந்த ஊர் சென்றாலும் இவைதான் ஃபேவரெட்

சாரா அலிகான்

சாரா அலிகான்

12-கோர்ஸ் மீல்ஸ் என்று கூறப்படும், 12 வகையான விதவிதமான கொரிய உணவுகளை, லண்டனில் சுவைத்துள்ளார். கிம்சி, டிம்சும், வறுத்த சிக்கன், டெம்பூரா உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றன.

பாலிவுட்டில் இளம் நடிகைகளில் முன்னணியில் வலம் வருபவர் நடிகை சாரா அலிகான். பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மூத்த மகளான சாரா, திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே, fat to fit என்று மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தவர் ஆவார். சில திரைப்படங்கள் ஹிட், சில படங்கள் ஃபிளாப் என்று ஆரம்பத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு சாரா தவிர்க்க முடியாத நடிகையாய் பாலிவுட்டில் இடம் பெற்றிருப்பார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாது, பல பொது நிகழ்சிகளிலும், பேட்டிகளிலும் சாரா அலிகானின் குறும்புத்தனமும், வெளிப்படையான பேச்சும் அனைவரையும் கவர்ந்தது. பயண விரும்பியான சாரா, உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். இவருடைய பயண வீடியோக்கள், ரீல்ஸ், புகைப்படங்கள் என்று எல்லாமே வைரலாகும்.

அதே போல, தன்னுடைய எடை குறைக்கும் முயற்சியில், உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதை பல முறை நகைச்சுவையோடு பகிர்ந்துள்ளார். என்னுடைய கனவு வாழ்க்கை இது தான் என்பது போல, ஃபுட்டியான சாராவின் பயணக் குறிப்பில் இடம் பெற்ற, அவருக்கு மிகவும் பிடித்த உணவுகளின் பட்டியல் இங்கே.

லண்டனில் 12-கோர்ஸ் கொரிய உணவு

அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் சாராவின் டிராவல் டைரியில், எல்லாரையும் அசத்தும் படி கொரிய விருந்து ஒன்று காணப்படுகிறது. 12-கோர்ஸ் மீல்ஸ் என்று கூறப்படும், 12 வகையான விதவிதமான கொரிய உணவுகளை, லண்டனில் சுவைத்துள்ளார். கிம்சி, டிம்சும், வறுத்த சிக்கன், டெம்பூரா உள்ளிட்ட உணவுகள் இடம்பெற்றன.

கேரமல் பனானா

நம் ஊரில், கேரளாவில் மட்டும் தான் பழம் பொறி என்று நேந்திரம் பழத்தை அல்லது செவ்வாழையை பொறித்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. வெளிநாடுகளில், பழத்தை சர்க்கரை பாகில் சேர்த்து, லேசாக கேரமலைஸ் செய்து இனிப்பு உணவாக பரிமாறும் பழக்கம் உள்ளது. சாராவுக்கு லண்டனில் கிடைக்கும் கேரமலைஸ் பனானா மிகவும் விருப்பமாம்.

வெயிட் லாஸ் ஆவதற்காக இதை மட்டும் செய்யாதீங்க.. மலச்சிக்கல் ஏற்படும்.. எச்சரிக்கும் மருத்துவர்!

பீட்சா லைஃப்

377

பீட்சாவை விரும்பாதவர்கள் மிக மிகக் குறைவு. இத்தாலியில் அறிமுகமான உணவாக இருந்தாலும், உலகம் முழுவதும் காணப்படுகிறது. சாராவுக்கு பீட்சா என்றால் உயிர்! பீட்சா லைப் என்று சமீபத்தில் சாரா பகிர்ந்த புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டது.

துபாயின் பிரத்யேகமான சீஸ்கேக்

எடை குறைக்க எந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தாரோ, அதே அளவுக்கு பிடித்த உணவுகளையும் தவிர்க்கவில்லை. கேக், பேஸ்ட்ரி எல்லாம் உடனடியாக எடை அதிகரிக்கும் என்றாலும், எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதை இன்று வரை பின்பற்றி வருகிறார். அதில், IIFA 2020 இல் கலந்து கொண்ட சாரா, துபாயின் மிகவும் ஸ்பெஷலான சீஸ்கேக்கிற்கு மயங்கி விட்டார் என்பதை கூறியிருந்தார்.

உடற்பயிற்சி செய்யும்போது சிலருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவது ஏன்..?

துருக்கிய உணவுகள்

துருக்கி நாட்டு உணவுகள் கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் அசத்தும். உலகம் முழுவதும் பயணிக்கும் சாராவுக்கு, ஆம்ஸ்டர்டாம் சென்றிருந்த போது துருக்கி உணவுகளை சாப்பிட்டுள்ளதாகவும், கெபாப் மீது காதல் கொண்டுள்ளதாகவும் பகிர்ந்தார்.

நியூயார்க்கின் காரசாரமான சாலட்

அமெரிக்கா சென்றிருந்த போது, மிகவும் காரமான சாலட் சாப்பிட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார். மியூசெலி இல்லாத நான் சாப்பிட்ட காரமான உணவு இது தான் என்று ப்ரொக்கோலி, ஸ்பைசி சிக்கன், ஷ்ரிம்ப் மற்றும் காய்கறிகளின் கலவையை குறிப்பிட்டிருந்தார்.

 

Tags:Sara Ali Khan