இன்றைக்கு இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் முகம் மற்றும் கூந்தலை அழகாக வைத்துக்கொள்வதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர். விதவிதமான ஹேர்ஸ்டைல்கள், முக அலங்காரங்கள் செய்வார்கள். ஆனால் இவை அனைத்தும் செய்வதற்கு முதலில் நம்முடைய முகம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பது அவசியமான ஒன்று.
நீங்கள் முடி உதிர்தல் அல்லது பலவீனமான முடியை எதிர்கொண்டால், அது பயோட்டின் குறைபாடு தான் முக்கிய காரணமாக இருக்கலாம். இதற்கு பயோட்டின் எனப்படும் ஊட்டச்சத்து சராசரியாக இருக்க வேண்டும் என்பதை முதலில் மறந்து விடக்கூடாது. ஆம் பயோடின் என்பது நமது உடலில் உள்ள கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள் போன்றவற்றை உடைக்க உதவும் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளில் ஒன்றாகும்.
இவ்வாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் பயோட்டினின் நன்மைகள் குறித்து தெரிவித்தாலும், நம்மில் பலருக்குப் பயோட்டின் என்றால் என்ன? என்பதே தெரிவதற்கு வாய்ப்பில்லை. பயோட்டின் என்பது ஒன்றும் இல்லை. ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள், காய்கறிகள், கீரைகள், காளான் மற்றும் அரிசி போன்றவற்றில் பயோட்டின் ஆதாரங்கள் அதிகளவில் உள்ளது.
பயன்படுத்தும் முறை:
மேற்கூறியுள்ள உணவுப்பொருள்களை உங்களது சமையலில் நீங்கள் தினமும் உபயோகிக்கலாம். அல்லது முடிக்கு ஷாம்பூவாகவும் பயோட்டினை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது பயோட்டின் மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம். ஆனால் கவனமுடன் இருக்க வேண்டும். புதிதாக நாம் எந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் போதும் சில பக்க விளைவுகள் ஏற்படும். இதேப் போன்று பயோட்டின் சப்ளிமென்டை எடுத்துக்கொண்டவர்களில் சிலருக்கு வாந்தி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் ஏற்படுத்துள்ளது. எனவே உங்களது உடலில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
தினசரி பராமரிப்பில் வைட்டமின் பி பயோட்டின் உபயோகிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Hair care, Vitamin Supplements