Home / News / karur /

காவிரி- குண்டாறு- தெற்குவெள்ளாறு இணைப்பு திட்டம்.. அதிக நிதி ஒதுக்க விவசாயிகள் கோரிக்கை

காவிரி- குண்டாறு- தெற்குவெள்ளாறு இணைப்பு திட்டம்.. அதிக நிதி ஒதுக்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர்

Karur : காவிரி-குண்டாறு- தெற்குவெள்ளாறு இணைப்புக்கான வாய்க்கால் வெட்டும் பணியை விரைவுபடுத்த வேண் டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி-குண்டாறு- தெற்குவெள்ளாறு இணைப்புக்கான வாய்க்கால் வெட்டும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

காவிரி-வைகை-குண்டாறு நதி நீர் இணைப்பின் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில்  காவிரியாற்றில்  கதவணை கட்டப்பட்டுள்ளது. மழை காலத்தில் வீணாக சென்று கடலில் கலக்கும் நீரை வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குண்டாறுக்கு கொண்டு  செல்லும் வகையில், காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் முதல் கட்டமாக,  காவிரியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு வரை கால்வாய் வெட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. மாயனூரில் காவிரியாற்றிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

உங்கள் நகரத்திலிருந்து (கரூர்)

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய அரவக்குறிச்சி தாசில்தார்

ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம்... மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

4 இடத்தில் கொடியேற்றிய திமுக ஒன்றியக் குழு தலைவர்... பள்ளியில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஆத்திரம்

வாய்க்காலுக்குள் பெண்ணை இழுத்துச்சென்று தவறாக நடக்க முயன்ற இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கரூர் அருகே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.7 கோடி மோசடி.. 3 பேர் கைது...

கழுத்தை நெறித்த கடன்.. மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து ஆசிரியர் தற்கொலை - கரூரில் சோகம்

கரூரில் கரை ஓரங்களில் உள்ள பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றும் வனத்துறை... விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்கள்...

பள்ளி மாணவிகளை மிரட்டி மது குடிக்க வைத்த இளைஞர்... சீருடையில் தள்ளாடிய மாணவிகள் - கரூரில் பரபரப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி 2 மாதத்தில் ₹ 260 கோடி கமிஷன் பெற்றுள்ளார் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

“பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க” - இடைநின்ற மாணவர்களை அழைத்துச் சென்று அசத்திய கரூர் மாவட்ட ஆட்சியர்!

இந்நிலையில்,  புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்கத்தினர்காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் சங்கத் தலைவர் துரைராஜ். தலைமையில் 50 க்கும் அதிகமான விவசாயிகள் நேரில் பார்வையிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் சங்கத்  தலைவர் துரைராஜ் பேசுகையில், மழைக்காலங்களில் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை வறட்சியான புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Must Read : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு

தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும்பணி மாயனூர் பகுதியில் நடந்து வருவதை நேரில் பார்வை விட்டோம். காவிரி தெற்கு வெள்ளாறு வாய்க்கால் வெட்டும் பணியில் சற்று தொய்வு (மந்தமாக) ஏற்பட்டுள்ளது.  இதற்கு மாநில அரசு இந்த திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி பணியை விரைவு படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர். 

Tags:Cauvery water, Farmers, Karur