Home / News / karur /

குடிபோதையில் இரண்டாவது மனைவியை எப்படி கொலை செய்தோம் என மறந்த கணவன்.. ஆறு, கிணறு என 3 நாள்கள் போலீசாரை அலைக்கழிப்பு

குடிபோதையில் இரண்டாவது மனைவியை எப்படி கொலை செய்தோம் என மறந்த கணவன்.. ஆறு, கிணறு என 3 நாள்கள் போலீசாரை அலைக்கழிப்பு

கணவர் தனபால் மற்றும் 2வது மனைவி அம்பிகா

கணவர் தனபால் மற்றும் 2வது மனைவி அம்பிகா

Crime News | மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் வீசியதாகவும் புதைத்ததாகவும் மாறி மாறி கூறி கடந்த மூன்று நாட்களாக அலைக்கழித்த நிலையில் போலீஸாரை உடலை தேடி கண்டுபிடித்துள்ளனர்.

கரூர் அருகே இரண்டாவது மனைவியை குடிபோதையில் கொன்று ஆற்றில் வீசியதாகவும், புதைத்தவிட்டதாக கூறி  போலீசாரை 3 நாள்கள் அலைகழித்துள்ளார். பிறகு பெரும்தேடுதலுக்கு பிறகு போலீசார் மனைவியின் உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ளசங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இரண்டும் மனைவிக்கும் ஒவ்வொரு குழந்தை உள்ளது. கடந்த 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அம்பிகா வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் தனபாலிடம், மேனகா கேட்டபோது அம்பிகாவை உங்க அம்மா வீட்டுக்கு அனுப்பியதாக கூறியுள்ளார். அம்மா வீட்டுக்கும் அம்பிகா செல்லவில்லை. இதையடுத்து தனது சகோதரியை காணவில்லை என மேனகா வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து (கரூர்)

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் - கையும் களவுமாக சிக்கிய அரவக்குறிச்சி தாசில்தார்

கரூரில் கரை ஓரங்களில் உள்ள பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றும் வனத்துறை... விளக்கம் கேட்கும் சமூக ஆர்வலர்கள்...

பரிசலில் சென்று நீர் சேகரிப்பு கிணறுகளை ஆய்வு செய்த கரூர் மேயர் கவிதா

வாய்க்காலுக்குள் பெண்ணை இழுத்துச்சென்று தவறாக நடக்க முயன்ற இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

“பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு பள்ளிக்கு வாங்க” - இடைநின்ற மாணவர்களை அழைத்துச் சென்று அசத்திய கரூர் மாவட்ட ஆட்சியர்!

நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது...

கழுத்தை நெறித்த கடன்.. மனைவி, மகளுக்கு விஷம் கொடுத்து ஆசிரியர் தற்கொலை - கரூரில் சோகம்

ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் கிடையாது - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கரூர் அருகே ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.7 கோடி மோசடி.. 3 பேர் கைது...

சூரிய மின் உற்பத்தி கணக்கீட்டு மீட்டர் வழங்க தாமதம்... மின் வாரிய அதிகாரிகள் ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜி 2 மாதத்தில் ₹ 260 கோடி கமிஷன் பெற்றுள்ளார் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு

இந்த புகார் அடிப்படையில் வெள்ளியணை காவல் நிலைய போலீசார் தனபாலிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது அவர் தனது இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கொன்று புதைத்துவிட்டதாக  கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் புதைத்த இடம் குறித்து கேட்டபோது,   போதையில் இருந்ததால், புதைத்த இடம் தெரியவில்லை என கூறி பல இடங்களுக்கும் போலீசாரை அழைத்துச் சென்று அலையவிட்டு உள்ளார்.

மேலும் சாக்கு மூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் வீசியதாகவும் மாறி மாறி கூறி கடந்த மூன்று நாட்களாக போலீஸாரை  அலைக்கழித்து உள்ளார். இந்நிலையில், வெள்ளியணை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனபாலையும் அழைத்துக் கொண்டு போலீசார்  கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தது தனபாலின் இரண்டாவது மனைவி அம்பிகா என தெரிவந்தது.

மேலும், போலீசார் தனபாலிடம் விசாரணை நடத்தியதில், மது போதையில் இருந்த தனபால் தனது மனைவியை கொன்று கிணற்றில் போட்டுவிட்டு, போதை காரணத்தால் மறந்து புதைத்து விட்டதாகவும், ஆற்றில் வீசியதாகவும் கூறியது தெரியவந்தது.

இதையடுத்து,  கிணற்றுக்குள் கிடந்த அம்பிகாவின் உடல் மீட்கப்பட்டு அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினரிடம் உடலை ஒப்படைத்துவிட்டனர்.

கொலை செய்த கணவர் தனபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்.

377

Tags:Crime News, Karur