Home / News / kanniyakumari /

உறவுகள் யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்.. கேட்பராற்று இறந்து கிடந்த சோகம்

உறவுகள் யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்.. கேட்பராற்று இறந்து கிடந்த சோகம்

உறவுகள் யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்

உறவுகள் யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டிய பெண்

கன்னியாகுமரி மாவட்டம் சூழால் ஊராட்சியில் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த 100 நாள் வேலை செய்யும் பெண் கேட்பாரற்று இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியை சேர்ந்தவர் ரோஷி (66). வயதான இவருக்கு உறவினர்கள் என்று சொல்லி கொள்ள யாரும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் வீட்டு வேலைகள் செய்து வந்த இவர் பின்னாட்களில் ஊராட்சி சார்பில் வழங்கக்கூடிய 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலைக்கு சேர்ந்து ஒரு நாள் கூட விடுமுறை போடாமல் வேலை செய்து வந்துள்ளார்.

இதனை பாராட்டி ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு முறை கவுரவித்து உள்ளார். அப்படி வேலைக்கு செல்லும் இடங்களில் உடன் பணி புரிபவர்கள் நீ இறந்தால் உன்னை அடக்கம் செய்ய யார் இருக்கார் என கேட்டு கிண்டல் அடித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரோஷி தான் இறந்தால் தன்னை அடக்கம் செய்ய ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று தான் வேலை செய்து சம்பாதித்து வைத்திருந்த ஐம்பதாயிரம் ருபாய் பணத்தில் தனக்கென்று ஒரு அழகான கல்லறையை கட்டி வைத்திருந்தார்.

அந்த கல்லறையின் பின்புறத்தில் ஒரு வாயில் வைத்து அதன் வழியாக உடலை உள்ளே தள்ளி அடக்கம் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ரோஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கவனிக்க யாரும் இல்லாததால் வீட்டிலேயே இறந்து கிடந்துள்ளார் இந்த நிலையில் ஒரு வாரமாக வீட்டின் வெளியே ரோஷியை காணமல் சந்தேகமடைந்த அந்த பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளார் .

உங்கள் நகரத்திலிருந்து (கன்னியாகுமரி)

சிங்கப்பூர் கணவருடன் வீடியோ காலில் பேசியபோது சண்டை - இளம்பெண் தற்கொலை

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு..

மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை.. தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் கடத்த முயன்ற 8000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

தொடர் டார்ச்சரால் பெண் தற்கொலை: காதலன் கைது.. முன்னாள் காதலனுக்கு போலீஸ் வலை

காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு

தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...

Also Read : ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் வந்த போலீசார் ரோஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர் கட்டி வைத்திருக்கும் கல்லறையில் அடக்கம் செய்யப்படும். கேலி கிண்டல்களால் மனம் நொந்து தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:Kanniyakumari