Home / News / kanniyakumari /

கன்னியாகுமரியில் 148 அடி கம்பத்தில் உயரமாகப் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதம்

கன்னியாகுமரியில் 148 அடி கம்பத்தில் உயரமாகப் பறந்த தேசியக்கொடி சூறைக்காற்றில் சேதம்

தேசியக்கொடி

தேசியக்கொடி

Kanyakumari : கன்னியாகுமரியில் ஏற்றப்பட்ட, தமிழகத்தில் மிக உயரமாக பறந்த தேசியக்கொடி சூறை காற்று காரணமாக சேதமானது.

தமிழகத்தில் மிக உயரமான தேசியக்கொடி  கன்னியாகுமரியில் ஏற்றப்பட்ட நிலையில் சூறை காற்று காரணமாக கொடியின் கீழ் பகுதி கிழிந்து சேதமானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து தேசிய கொடியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் டெல்லியில் இருப்பது போல் மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைப்பதற்கு அனுமதி பெறப்பட்டு மாநிலங்களவை எம்.பி., விஜயகுமார் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து கன்னியாகுமரி மகாதானபுரம் நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள ரவுண்டானா சந்திப்பில் 147.60 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைத்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (கன்னியாகுமரி)

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது...

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை.. தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு

குமரியில் இருந்து கேரளாவுக்கு 4 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார்

தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..

காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதல்... போலீஸ் உட்பட 2 பேருக்கு கத்திக்குத்து - கன்னியாகுமரியில் பயங்கரம்

கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூங்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் 48 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட தேசியக்கொடியை  நேற்று முன் தினம் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஏற்றினார். கொடி ஏற்றப்பட்டு கம்பீரமாக பறக்க துவங்கிய நிலையில் நேற்று வீசிய சூறை காற்று காரணமாக கொடியின் கீழ் பகுதி கிழிந்தது.

Must Read : அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

இதனை கண்ட சிலர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கொடியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று கொடியை  ராட்சத கம்பதில் இருந்து கீழே இறக்கி அதனை சரி செய்ய கொண்டு சென்றுள்ளனர்.

செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில்.

Tags:Kanyakumari