Home / News / kanniyakumari /

கள்ளகாதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மர்மமான முறையில் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

கள்ளகாதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மர்மமான முறையில் உயிரிழப்பு... போலீசார் விசாரணை

உயிரிழந்த தம்பதி

உயிரிழந்த தம்பதி

Kanyakumari : குமரி மாவட்டம்  குலசேகரம் அருகே  கள்ளகாதல் விவகாரம், கள்ள காதலனுடன் ஏற்பட்ட கடன் தொல்லையால் இளம் தம்பதியினர் தற்கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம்  சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றிவரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை.

இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு தெரியாமல்  அழகன்பாறை அருகே தட்டான்விளையை சேர்ந்த வர்க்கீஸ் என்பவரது மகன் ஆன்றோ பிரபிளின் என்பவரை திருமணம் செய்வதாக கூறி கொஞ்சம் கொஞ்சமாக 30லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.

இதையடுத்து ஆன்றோ பிரப்ளின் நேற்று மாலையில் தனது தாயாருடன் சந்தியாவின் வீட்டுற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இ துகுறித்து கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில்  உறவினர்கள்  சந்தியாவின் போனிற்கு  அழைத்தபோது போன் எடுக்காததால் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்.. கடலுக்கு செல்ல ரெடியாகும் குமரி விசைப்படகு மீனவர்கள்..

சோதனைசாவடியில் குறட்டைவிட்டு தூங்கிய காவலர்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பரிசு

வேரோடு சாய்ந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பிய பயணிகள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்...

குமரியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது...

குமரியில் இருந்து கேரளாவுக்கு 4 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை மடக்கி பிடித்த போலீசார்

தக்கலையில் தடை செய்யப்பட்ட நச்சு புகையிலை விற்பனை... 2 பெண்களுக்கு சிறை தண்டனை...

காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு

மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்... தேங்காய் பட்டணம் மீனவர்கள் கோரிக்கை...

டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதல்... போலீஸ் உட்பட 2 பேருக்கு கத்திக்குத்து - கன்னியாகுமரியில் பயங்கரம்

கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை.. தயார் நிலையில் தேசிய பேரிடம் மீட்பு குழு

வீடு பூட்டியிருத்ததை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும், அருகில் கட்டிலில் ஜான்சன் விஷமருந்திய நிலையிலும் சடலமாக இருந்தனர். இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரம் காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில், மனைவி வேறொருவரை திருமணம் செய்வதாக கூறி பணம் வாங்கியதை அறிந்த ஜாண்சன் மனைவியை கொன்று தானும் தற்கொலைசெய்தாரா?அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must Read : வந்தவாசி அருகே தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - வைரலாகும் பரபரப்பு வீடியோ

கள்ளகாதல் விவகாரத்தில் கடன் வாங்கி தம்பதியினர் தற்கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பெரும்பரபரபப்பு ஏற்படுத்தியுள்ளது.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

377

Tags:Crime News, Death, Kanyakumari, Suicide