PREVNEXT
முகப்பு / செய்தி / கன்னியாகுமரி / கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

கன்னியாகுமரியில் காணாமல் போன 211செல்போன்கள்.. மேற்கு வங்கம் வரை சென்று மீட்ட சைபர் க்ரைம் போலீஸார்!

Kanniyakumari district News : கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன ரூ.25 லட்சம் மதிப்பிலான 211 செல்போன்கள் மீட்கப்பட்ட நிலையில், செல்போனுடன் தவறிய பணம் ஏடிஎம் கார்டுகளையும் உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

செல்போன்கள் மீட்பு

செல்போன்கள் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் திருடு போனதாகவும், காணாமல் போனதாகவும் ஏராளமான புகார்கள் குவிந்தன. இதனையடுத்து திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை உடனடியாக கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனது நேரடி கண்காணிப்பில் உள்ள சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் செல்போன்களை அதன் ஐஎம்இ எண் உதவியுடன் எந்த பகுதியில் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்து திருடியவர்களை கைது செய்ததோடு செல்போன்களையும் மீட்டனர். அந்த வகையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான 211 செல்போண்களை சைபர் கிரைம் போலீசார் மீட்ட நிலையில் அதை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தக்கலை காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் நகரத்திலிருந்து (கன்னியாகுமரி)

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 94.02% பேர் தேர்ச்சி!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 95.99% பேர் தேர்ச்சி!

B.com படித்தால் என்ன வேலை கிடைக்கும்? வணிகவியல் துறை தரும் வேலைவாய்ப்புகள் இதோ!

பெரியப்பா மகளை மயக்க மருந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்... வீடியோ எடுத்தும் மிரட்டல்!

உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. BA தமிழ் கற்பவர்களுக்கு எந்தெந்த துறையில் வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!

ஆடை வடிவமைப்பாளர் பிரிவை எடுத்து படித்தால் அதிக வேலைவாய்ப்பு இருக்கு.. குமரி பேராசிரியர் சொல்லும் அறிவுரை..

கனிமவள விதிமீறல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை.. குமரி ஆட்சியர் அதிரடி!

குடும்பத்தோடு போய் என்ஜாய் பன்னுங்க..! குமரியில் களைகட்டிய கோடை பொருட்காட்சி..!

குமரியின் முதல் பெண்கள் கல்லூரி..! இங்கு இத்தனை பாடப்பிரிவுகள் உள்ளதா..!

ரயில்வே பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. மே 26ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கம்!

மனவளா்ச்சி குன்றியோரை பாதுகாக்க ஆள் வேண்டுமா? உடனே அப்ளை பண்ணுங்க! ஆட்சியர் அதிரடி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத், காணாமல் போன செல்போன்களை மேற்கு வங்கம் வரை சென்று போலீசார் மீட்டுள்ளனர் என கூறி செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்ததோடு அவர்களுக்கு ‘காவல் உதவி ஆப்’-ன் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்ததோடு அதை பயன்படுத்தவும் கேட்டுக்கொண்டார்.

Must Read : கோவில்பட்டி அரசுக் கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை.. 2 மாணவர்கள் சஸ்பெண்ட் - நடந்தது என்ன?

top videos
  • புதுகை ஸ்ரீவெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேக விழா.. முளைப்பாரி எடுத்த பெண்கள்..
  • அதென்ன பாதிரி மாம்பழம்..? மயிலாடுதுறையில் ஃபேமஸாகும் புது மாம்பழ வகை..!
  • புதுவை கௌசிக பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக உற்சவம்!
  • திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா..! பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!
  • விராலிமலை முருகன் கோயில் வைகாசி தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்..
  • தொடர்ந்து செல்போன்களை உரியவர்களிடம் வழங்கும் போது, செல்போன் உறையில் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்த பணம் மற்றும் ஏடிஎம் கார்டுகளையும் சைபர் க்ரைம் போலீசார் முறையாக மீட்டு கொடுப்பதை பார்த்த அவர், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ஷம்சுதிர் என்பவருக்கு பொதுமக்கள் மத்தியிலேயே கைகொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

    Tags:Kanniyakumari, Mobile phone, Theft

    முக்கிய செய்திகள்