Home / News / kanchipuram /

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்... மாஸ்க் கட்டாயம்.. இல்லாவிட்டால் அபராதம்.. காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்... மாஸ்க் கட்டாயம்.. இல்லாவிட்டால் அபராதம்.. காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

Corona : கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 686 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3951-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் அனைவரும் வெளியில் செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.கீர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில், “ ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு கட்டாயம் அபாராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் ஒருவருக்கொருவர் 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களின் நுழைவு வாயிலில் கட்டாயம் கைகளை சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். மேலும் உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும்.

உங்கள் நகரத்திலிருந்து (காஞ்சிபுரம்)

மரணத்திலும் இணை பிரியா தம்பதி.. மனைவியின் இறப்பு செய்திக்கேட்டு உயிர்விட்ட கணவன்

நள்ளிரவில் ஏடிஎம் குப்பைத் தொட்டியில் 43 சவரன் தங்க நகைகளை போட்டுச் சென்ற இளம்பெண்.. ஷாக்கான வாட்ச்மேன்..

பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

ஒற்றைத் தலைமை குழப்பம்: இடைத்தேர்தலில் அதிகாரப்பூர்வ வேட்பாளரின்றி அ.தி.மு.க- சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்

மாற்று இடம் தருகிறோம்.. குயின்ஸ்லேண்ட் நிறுவனம் விடுத்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு...

தந்தைக்கு வீட்டில் மார்பிள் சிலை வைத்த பாசக்கார மகன்கள்.. மூத்தவர்களின் அறிவுரைகளை கேட்டு நடக்க வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு... 4 ஆண்டுகளாக வேலையே செய்யாத சிலைகடத்தல் தடுப்பு பிரிவு.. 3 மாதத்தில் விசாரணையை முடிக்க போலீசுக்கு ஆர்டர் போட்ட கோர்ட்...!

நில மோசடி வழக்கு... காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார்கள், சார்பதிவாளர், நில அளவையர் கைது

சென்னை புறநகர் பகுதியான பரந்தூரில் 2-வது விமானநிலையம்... கிராம மக்கள் வரவேற்பு...

என்னை செல்லமாக சின்னவன் என்றே கூப்பிடுங்க.. சின்னவர் என்றால் பலருக்கு வயிறு எரிகிறது - உதயநிதி ஸ்டாலின்

ஸ்மிருதி இரானியின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் போராட்டம்

பெரிய வணிக வளாகங்களில் ஏ.சி பயன்படுத்த தடை. பொதுமக்கள் அவசியமின்றி பொதுஇடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசிகள் கட்டாயமாக போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையில் உள்ள மருத்துவரை அணுகுமாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:Corona, Corona Mask, Corona spread, Corona Vaccine, Covid-19, Kancheepuram, Tamil News