பேருந்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் துவைத்து எடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இளம்பெண் ஒருவர் அக்டோபர் 20-ம் தேதி உடற்பயிற்சியை முடித்துவிட்டு பேருந்தில் தனது இல்லம் நோக்கி பயணமாகியுள்ளார். பேருந்தில் கூட்டமாக இருந்துள்ளது. இதனைப்பயன்படுத்தி இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் ரீதியிலாக சீண்டியுள்ளார். அந்தப்பெண் உடனடியாக அந்த நபரை கழுத்தோடு இறுகப்பிடித்த பேருந்தில் வைத்து சத்தம்போட்டுள்ளார். தொடர்ந்து அந்தநபரில் மூக்கில் குத்துவிட்டவர் அவரை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகளை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அந்தப்பெண் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர். சம்பவத்தன்று உடற்பயிற்சி முடித்து பேருந்தில் வீடு திரும்பியபோது கூட்டத்தில் பேருந்தில் அந்த இளம்பெண்ணுக்கு பின்னால் நின்றிருந்த வாலிபர் பாலியல் ரீதியில் அந்தப்பெண்ணை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை இறுகப்பிடித்து தாக்கியுள்ளார்.
தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பற்றி கூறிய பெண் பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் யாரும் தனக்கு உதவுவதற்கு முன்வரவில்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இன்று மக்கள் யாருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. எல்லோருக்கும் வீடியோ எடுப்பதில் தான் ஆர்வம் உள்ளது’ எனக் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Bus, Crime | குற்றச் செய்திகள், Sexual abuse, Sexual harasment, Viral Video, Woman