Home / News / explainers /

Explainer | திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகுக்கு இவ்வளவு மவுசு ஏன்? அசர வைக்கும் சீக்ரெட்!

Explainer | திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகுக்கு இவ்வளவு மவுசு ஏன்? அசர வைக்கும் சீக்ரெட்!

அம்பெர்கிரிஸ் எனும் அபூர்வ மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகின்றது.

அம்பெர்கிரிஸ் எனும் அபூர்வ மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகின்றது.

அம்பெர்கிரிஸ் எனும் அபூர்வ மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகின்றது.

மீன் செத்தா கருவாடு… நாம் செத்தா வெருங்கூடு என்றார் கண்ணதாசன். அது 100 சதவீதம் உண்மை. விலங்குகள் பல இருந்தாலும் பயன், இறந்தாலும் பயன்தான். உயர்ரக பொருட்கள், மருத்துவம் என விளங்குகளில் இருந்து மனிதன் பலவற்றை பெறக் கற்றுக்கொண்டான். அதன் தாக்கம் தான் விலங்குகள் வேட்டை வரை செல்கிறது. அப்படியாக ஒரு விலங்கின் உமிழ்ந்த மெழுகு தங்கத்தை விட விலை அதிகம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகு (திமிங்கலத்தின் வாந்தி என்றும் கூறலாம்) சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் அதன் விலை இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது உண்மை. சரி, ஒரு விலங்கின் எச்சத்திற்கு இவ்வளவு மவுசு ஏன்? அப்படி அதன் பயன்கள்தான் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வழியாக திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகை காரில் கடத்திச் சென்ற 6 பேரை வாகன தணிக்கையில் இருந்த போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அந்த உமிழ்ந்த மெழுகு இரண்டு கிலோ எடையும், சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு சுமார் 2 கோடியும் ஆகும். விசாரணையில், தூத்துக்குடி கடல் வழியாக இலங்கை மற்றும் பிற வெளி நாடுகளுக்கு கடத்தி இவர்கள் இதை கள்ளசந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இது மட்டுமல்ல, கடந்த மாதம் 5.3 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகை கடத்திய 3 பேர் அகமதாபாத்தில் சிக்கினர். அவர்கள் கடத்திய அந்த உமிழ்ந்த மெழுகின் மதிப்பு 7 கோடி ஆகும். தமிழகத்திலும் கடந்தாண்டு சுமார் 6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகு கரை ஒதுங்கியதும் கேட்டிருப்போம்.

சரி, திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகில் அப்படி என்னதான் இருக்கிறது? அதற்கு ஏன் இவ்வளவு மவுசு? சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் (sperm whales), ஸ்குவிட்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களை வேட்டையாடி சாப்பிடுகிறது. அப்படி சாப்பிடும்போது அதன் செரிமான மண்டலத்தில் இருந்து அபூர்வமாக சில திரவங்களை வெளியேற்றும். ஸ்க்விட்களின் பெரும்பகுதி பெரும்பாலும் மென்மையாக இருக்கிறது, ஆனால் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் ஜீரணிக்க முடியாத கடினமான சில பகுதிகள் மீண்டும் புத்துயிர் பெறுவது போல் அம்பெர்கிரிஸாக (ambergris) உருவெடுக்கிறது. மேலும், இந்த அம்பெர்கிரிஸின் உருவாக்கம் திமிங்கலத்தின் குடலை காயத்திலிருந்தும் பாதுகாப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பின், அந்த திரவம் போன்ற பொருள் ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் வெளியேறுவது போல் அம்பெர்கிரிஸ் என்ற பொருளாக வெளியேறும். இந்த பொருள் கடலின் மேல் பகுதியில் மெழுகு போன்று மிதக்கும். அந்த அபூர்வ மெழுகானது மருத்துவ பொருள் தயாரிக்கவும், விலை உயர்ந்த வாசனை திரவங்களை தயாரிக்கவும் பயன்படுகின்றது. இது பார்ப்பதற்கு பாறாங்கல் போன்று காட்சியளிக்கும். முதலில் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருந்தாலும், பின்னர் நேரம் செல்லச் செல்ல ஆளை தூக்கும் திரவ பொருள் போல் அதன் நறுமணம் இருக்குமாம். ஆனால் நறுமணத்தைத் தக்கவைக்க அம்பெர்கிரிஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அம்ப்ரின் எனும் ஆல்கஹாலை பயன்படுத்தும் ஆடம்பர வாசனை திரவிய நிறுவனங்களால் இது பெரிதும் விரும்பப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எல்லா அம்பெர்கிரிஸும் சந்தைகளில் விற்கப்படுவதில்லை ஆனால், தூய்மையான வெள்ளை வகைகள் வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனங்களிடம் பெரிதும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. பொதுவாக, அம்பெர்கிரிஸ் சாம்பல், ப்ரவுன் மற்றும் கருப்பு நிறத்திலும் இருக்கும். அம்பெர்கிரிஸ் அரிதாக கிடைக்கும் ஒரு ‘அதிசயம்’ என்பதால் அதனை ‘மிதக்கும் தங்கம்’ என்று அழைக்கின்றனர். எனவே, அதன் சந்தை மதிப்பு மிக அதிகம். அம்பெர்கிரிஸை வேட்டையாடுவது அவ்வளவு எளிதல்ல. ஸ்பெர்ம் திமிங்கலங்கள், அம்பெர்கிரிஸை வேட்டையாடுவது சட்டவிரோதமானதும் கூட. ஆனால் திமிங்கலத்தின் உமிழ்ந்த மெழுகு கடற்கரையில் கரை ஒதுங்கினால், அதன் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய அதிர்ஷ்டகாரர்களையும் பார்த்திருக்கிறோம்.

Tags:Explainer, Gujarat, Tamil Nadu, Whale shark