Home / News / explainers /

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்ஸின் முதுகெலும்பாக இருக்கும் பேக்-என்ட் டெவலப்பர்ஸ் வேலைக்கான தகுதிகள் மற்றும் திறன்கள் என்ன?

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்ஸின் முதுகெலும்பாக இருக்கும் பேக்-என்ட் டெவலப்பர்ஸ் வேலைக்கான தகுதிகள் மற்றும் திறன்கள் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

Java, Python மற்றும் PHP ஆகிய மூன்று மிகவும் விரும்பப்படும் ப்ரோகிராம்மிங் லாங்குவேஜ்களில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெறுவதன் மூலம் வெற்றிகரமான பேக்-என்ட் டெவலப்பராக தொழில் வாழ்க்கையை துவக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாஃப்ட்வேர் டெவலப்பர்கள், எண்ணற்ற டிவைஸ்கள், இயந்திரங்கள், ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் வெப் அப்ளிகேஷன்களுக்கு சப்போர்ட் செய்து மனிதர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவுகிறார்கள். சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்கள் நவீன டிஜிட்டல் உலகின் முக்கிய உந்து சக்தியாக மாறிவிட்டன.

சாஃப்ட்வேர்ஸ் பற்றி நாம் நினைக்கும் போது யூஸர்களுக்கான நட்பு செயல்பாடுகள் மற்றும் அம்சங்களின் அழகான தளவமைப்பு மற்றும் எளிமை செயல்பாடு உள்ளிட்டவற்றை பற்றி நாம் பெரும்பாலும் சிந்திக்கிறோம். சாஃப்ட்வேர்கள் பொதுவாக 3 முக்கிய பரந்த பகுதிகளை கொண்டது. பேக்-என்ட் அல்காரிதம், டேட்டா ப்ராசஸ்டு அதாவது செயலாக்கப்படும் தரவு, மூன்றாவதாக இவை எவ்வாறு யூஸர் இன்டர்ஃபேஸுடன் தொடர்பு கொள்கின்றன ஆகியவை ஆகும். இவற்றின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்.? பேக்-என்ட் டெவலப்பர்ஸ். ஆம், சாஃப்ட்வேர்ஸ்களுக்கு முக்கிய முதுகெலும்பாக இருக்கும் பேக்-என்ட் டெவலப்பர்ஸ்களின் முக்கிய பங்கை ஆழமாக புரிந்து கொள்வோம்.

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட்டின் (Software Development) முதுகெலும்பாக அறியப்படுகின்றனர் பேக்-என்ட் டெவலப்பர்ஸ் (Back-End Developers) திரைக்குப் பின்னால் வேலை செய்வதால் பெரும்பாலும் அவர்களின் உழைப்பு வெளியில் தெரியாமல் போகிறது. ஃப்ரன்ட்-என்ட் டெவலப்பர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஃபங்ஷ்னலி கோட் எழுதுகிறார்கள் மற்றும் யூஸர்கள் காணாத தொழில்நுட்பங்களுக்கு லாஜிக் வழங்குகிறார்கள் பேக்-என்ட் டெவலப்பர்ஸ். எடுத்துக்காட்டாக ஸ்கிரீனில் இருக்கும் பட்டனை ட்ரிகர் செய்தால் அது என்ன செய்யும் மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டுபிடிப்பவர்கள் ஆவர்.

டெக்னலாஜியின் விரைவான முன்னேற்றங்களால் பேக்-என்ட் டெவலப்பர்ஸ்களுக்கான தேவை உச்சத்தை எட்டுகிறது. மேலும் உலகளவில் மிகவும் விரும்பப்படும் வேலைகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது.

ஏன் ஒருவர் பேக்-என்ட் டெவலப்பர் ஆக வேண்டும்..?

தொற்றுக்கு மத்தியில் அனைத்துத் தொழில்துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் உலகளாவிய தொற்றுநோயின் அலைகளைத் துணிச்சலாக எதிர் கொண்டு நுகர்வோர் எதிர்பார்ப்புகளை மேம்படுத்தி, தொழில்நுட்பத்துடன் தங்கள் உள் அமைப்புகளை வலுப்படுத்துவதால் சாஃப்ட்வேர் டெவலப்பர்களுக்கு அதிக தேவை காணப்படுகிறது. கோடிங் எழுதுவது முதல் அப்ளிகேஷன் இன்டர்ஃபேஸ்களை (API-க்கள்) நிர்வகித்தல், மற்றும் logic-ல் பிழைத்திருத்தம் செய்வது வரை பேக்-என்ட் டெவலப்பர்ஸ் முழு மென்பொருள் கட்டமைப்பையும் ஒழுங்கமைக்கிறார்கள். பேக்-என்ட் டெவலப்பர்ஸ் இல்லாமல் வெப் மற்றும் சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் உலகம் என்பதே இல்லை எனலாம்.

Gmail யூஸர்களே உஷார்... மெயில் மூலம் நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகள்!

பேக்-என்ட் டெவலப்பர்ஸ் எங்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்..?

மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற ஐடி ஜாம்பவான்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரை எந்தவொரு சாஃப்ட்வேர் அப்ளிகேஷன்களிலும் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பேக்-என்ட் டெவலப்பர்ஸ்க்ளுக்கான தேவை அதிகம் உள்ளது. அதிக தேவையின் காரணமாக ஐடி தொழில்கள், நிதி, சுகாதாரம், சில்லறை விற்பனை போன்றவற்றில் பேக்-என்ட் டெவலப்பர்ஸ்களுக்கு தாராளமாக ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் பேக்-என்ட் டெவலப்பர்ஸ்களுக்கான சம்பளம் ரூ. 2. லட்சம் முதல் ரூ.19.9 லட்சம் வரை சராசரி ஆண்டு சம்பளம் ரூ. 5.5 லட்சமாக உள்ளது. மேலும் சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா மற்றும் பிரான்ஸ் போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நாடுகளில் பேக்-என்ட் டெவலப்பர்ஸ் அதிகம் தேவைபடுகிறார்கள்.

பேக்-என்ட் டெவலப்பர்ஸ் வேலைக்கான தகுதி..

377

கணினி அறிவியலின் பின்னணி மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்துடன் ப்ரோகிராமிங் ஆர்வமுள்ளவர்களுக்கு பேக்-என்ட் டெவலப்பர்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு நல்ல பேக்-என்ட் ப்ரோகிராமர் கோடிங் லாங்குவேஜஸ், டேட்டாபேஸ் மற்றும் டேட்டாபேஸ் கேச்சிங் ஆகியவற்றில் நன்கு புலமை பெற்றவராக இருக்க வேண்டும். ப்ரொடக்ஷன் வெப் சர்வர் டெக்னலாஜி மற்றும் அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் உள்ளிட்டவற்றை ஒருவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். அல்காரிதம்ஸ் மற்றும் டேட்டா ஸ்ட்ரெக்சர்ஸ் பற்றிய அறிவும் ஒரு தொழில்முறை பேக்-என்ட் டெவலப்பராக மாறுவதற்கு அவசியம். பேக்-என்ட் டெவலப்மென்ட் வேலைகளுக்குத் தகுதிபெற, ஆர்வமுள்ளவர்கள் பேக்-என்ட் டெவலப்மென்ட்டை கற்று கொள்வதற்கான படிப்புகளை தேர்வு செய்யலாம். மேலும் பயிற்சிக்காக ஆன்லைனில் ஏராளமான சோர்ஸ்களையும் பார்க்கலாம். Spring போன்ற ஜாவா ஃபிரேம்வொர்க்ஸ் , Django போன்ற பைதான் ஃபிரேம்வொர்க்ஸ், ASP.NET ஃபிரேம்வொர்க்ஸ், Ruby on Rails போன்ற பேக்-என்ட் லாங்குவேஜ்களில் ஒன்று அல்லது இரண்டை கற்று கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

தேவைப்படும் பயிற்சி மற்றும் திறன்கள்:

Java, Python மற்றும் PHP ஆகிய மூன்று மிகவும் விரும்பப்படும் ப்ரோகிராம்மிங் லாங்குவேஜ்களில் ஏதேனும் ஒன்றில் நிபுணத்துவம் பெறுவதன் மூலம் வெற்றிகரமான பேக்-என்ட் டெவலப்பராக தொழில் வாழ்க்கையை துவக்க முடியும். பின் HTML, CSS மற்றும் JavaScript போன்றவற்றையும் கற்று கொள்ள வேண்டும். வெவ்வேறு டேட்டாபேஸ்களில் கோட்ஸ்களின் மாற்றங்களைக் கண்காணிக்க GitHub மற்றும் GitLab போன்ற வெர்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம்ஸ் பற்றிய முழுமையான அறிவும் அவசியம். கூடுதலாக, ஒரு ப்ராஜக்டில் பணிபுரியும் போது, ஒரு பேக்-என்ட் டெவலப்பர் டேட்டாபேஸ், அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) மற்றும் சர்வர் ஹேண்ட்லிங் பற்றிய அறிவை கொண்டிருக்க வேண்டும். JSON, SOAP, REST மற்றும் GSON ஆகியவை பேக்-என்ட் டெவலப்பர்ஸ்களிடையே மிகவும் பிரபலமான API-க்களில் சில. இந்தத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஃபிரேம்வொர்க்ஸ்களை வெளிப்படுத்துவது, மென்பொருள் அல்லது இணையப் பயன்பாட்டின் இலக்குகளைப் புரிந்து கொண்டு பயனுள்ள தீர்வுகளை உருவாக்க ஆர்வலர்களுக்கு உதவும்.

சாஃப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் டெவலப்பர்களின் எதிர்காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கிறது. ஆன்லைன் டூல்ஸ், டுட்டோரியல்ஸ் மற்றும் லேர்னிங் கிளாஸ் உள்ளிட்டவற்றுடன் ஆர்வமுள்ளவர்கள் அனுபவமுள்ள நிபுணர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். மேலும் ஒப்பந்த வேலைகள் மற்றும் தொலைதூர பணியாளர்களை உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் பேக்-என்ட் டெவலப்பர்ஸ் ரிமோட் வேலைகள் மூலம் நேரடியாக உலகின் சில முன்னணி நிறுவனங்களுக்கு தங்கள் திறன்களை வழங்க முடியும்.