Home / News / explainers /

ஓமைக்ரான் அறிகுறிகள் இருந்தும் கொரோனா பாசிட்டிவ் இல்லையா? காரணம் குறித்து விளக்கும் மருத்துவர்கள்

ஓமைக்ரான் அறிகுறிகள் இருந்தும் கொரோனா பாசிட்டிவ் இல்லையா? காரணம் குறித்து விளக்கும் மருத்துவர்கள்

ஓமைக்ரான் பாதிப்பு இருப்பினும் சிலருக்கு RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருகிறது. இவை CT மதிப்பீட்டை வைத்து கணிக்கின்றனர்.

ஓமைக்ரான் பாதிப்பு இருப்பினும் சிலருக்கு RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருகிறது. இவை CT மதிப்பீட்டை வைத்து கணிக்கின்றனர்.

ஓமைக்ரான் பாதிப்பு இருப்பினும் சிலருக்கு RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருகிறது. இவை CT மதிப்பீட்டை வைத்து கணிக்கின்றனர்.

கொரோனா மூன்றாம் அலை தொடங்கியதில் இருந்தே யாரை கேட்டாலும் காய்ச்சல், சளி, இரும்பல் என்றே சொல்கின்றனர். அந்த அளவிற்கு இந்த நோயின் பரவல் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி, உலக அளவிலும் இந்த நோய் பரவல் பல மடங்கு உயர்ந்து வருகிறது. சில நாடுகளில் அதிக கட்டுபாடுங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் மூன்றாம் அலையின் தாக்கம் வீரியம் பெற்றுள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் பலருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பாதிக்கிறது. இதில் சிலருக்கு ஓமைக்ரான் அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்தபோது அதற்கான சரியான முடிவுகள் வருவதில்லை என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், இது போன்று வருவதற்கு பல காரணிகள் உள்ளது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. சில நேரங்களில் சரியான முறையில் சேம்பிள்களை எடுக்காவிட்டாலும் இது போன்று நடக்கலாம்.

மேலும், ஓமைக்ரான் பாதிப்பு இருப்பினும் சிலருக்கு RT-PCR பரிசோதனையில் நெகட்டிவ் என்று வருகிறது. இவை CT மதிப்பீட்டை வைத்து கணிக்கின்றனர். இதன் மதிப்பு 35-க்கும் மேல் இருந்தால் நெகட்டிவ் என்று வெளிக்காட்டும். எனவே இது ஒருவரின் உடலில் எந்த அளவிற்கு வைரஸ் தாக்குதல் உள்ளதோ அதை பொறுத்து கணக்கிடப்படுகிறது. இதனால் தான் சிலருக்கு ஓமைக்ரான் பாதிப்பு இருப்பினும் நெகட்டிவ் என்று காட்டுகிறது.

அதே போன்று RAT என்று சொல்லப்படும் விரைவு பரிசோதனையானது அந்த அளவிற்கு துள்ளியமாக முடிவுகளை தருவதில்லை. இவை 50% வரை மட்டுமே சரியான முடிவுகளை தருகிறது. இந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவல் தன்மையில் டெல்டா வகையை போன்றதாக உள்ளது. இவை எந்த வகை என்பதை S ஜீன்களின் பிரிவை வைத்து அறியலாம்.

ஓமைக்ரான் அறிகுறிகள்:

இந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு இருப்பதை 5 முக்கிய அறிகுறிகளை கொண்டு அறிந்து கொள்ளலாம். சளி, பசியின்மை, மூக்கடைப்பு, ஜலதோஷம், உடல் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் அவை ஓமைக்ரான் வகையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலும் இவற்றை அதிக வீரியத்தின் அளவு முதல் குறைவான வீரியம் வரை வகைப்படுத்துகின்றனர்.

இதையும் படிங்க | பல் சுத்தம் முதல் டீடாக்ஸ் வரை… ஆயில் புல்லிங்கின் அசரவைக்கும் நன்மைகள்!

வகைகள்:

காய்ச்சல், சளி, சோர்வு, வாசனை அல்லது சுவையற்ற உணர்வுகளை கொண்டு இருந்தால் அவர்களுக்கு பொதுவான ஓமைக்ரான் அறிகுறிகள் உள்ளது என்று அர்த்தம். இதுவே வறண்ட தொண்டை, தலைவலி, உடல் வலி, வயிற்று போக்கு, தோலில் ரேஷஸ், விரல்களின் நிறம் மாறுதல், கண் எரிச்சல் ஆகிய அறிகுறிகள் இருந்தால், லேசான ஓமைக்ரான் அறிகுறிகள் உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, பேச முடியாமல் போனாலோ, அல்லது நெஞ்சு வலி வந்தாலோ அவர்களுக்கு ஓமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

377

Tags:Covid-19, Explainer, Omicron Symptoms