PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

அம்மா பற்றிய ரகசியம் அறிந்து அதிர்ச்சியடைந்த சூர்யா... மாரி சீரியலில் இன்று!

அம்மா பற்றிய ரகசியம் அறிந்து அதிர்ச்சியடைந்த சூர்யா... மாரி சீரியலில் இன்று!

விக்ரம் வெளியே போனதும் அந்த நபர் உடனே அரவிந்துக்கு போன் செய்து விக்ரம் வந்து விசாரித்த விஷயத்தை சொல்ல அரவிந்த் ஷாக்காகிறான்.

மாரி சீரியல்

மாரி சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரியில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடை இங்கு குறிப்பிடுகிறோம். 

இன்றைய எபிசோடில் மாரியை நினைத்து சூர்யா வருத்தப்பட்டு கொண்டிருக்க விக்ரம் மெடிக்கல் ஷாப்பில் பார்த்த நபரை தேடி கொண்டு போகிறான். அவன் வீட்டுக்கு சென்று ஏன் அந்த விஷ பாட்டிலை வாங்கின என்று கேட்க தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனக்காக வாங்கினேன் என்று சொல்கிறான்.

அடுத்து விக்ரம் வெளியே போனதும் அந்த நபர் உடனே அரவிந்துக்கு போன் செய்து விக்ரம் வந்து விசாரித்த விஷயத்தை சொல்ல அரவிந்த் ஷாக்காகிறான். சரி சரி நீ ஊருக்கு போயிடு என்று அரவிந்த் சொல்ல உடனே அந்த நபர் ஓகே என்று போனை வைத்து திரும்ப அங்கே விக்ரம் நிற்கிறார்.

விக்ரமை பார்த்து அவன் ஓட துரத்தி பிடித்த விக்ரம் அவனை நேராக தாராவிடம் அழைத்து சென்று விஷயத்தை சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள். ஒருவேளை சூர்யா விசாரிக்க சொல்லி இருப்பானோ என யோசிக்க அந்த நபர் தப்பியோட விக்ரம் துரத்திக் கொண்டு ஓட அந்த நபர் நேராக சூர்யாவிடம் சென்று சூர்யா என்று தெரியாமல் உதவி கேட்க அப்போது விக்ரம் வர இருவரும் அந்த நபரை துரத்த அப்போது கருப்பு சட்ட மாற்றி வந்த உருவம் அவனை கொன்று விட்டுப் போகிறது.

வாழ்நாள் முழுவதும் இப்படித்தான்... தீவிர நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்

அடுத்து சூர்யா என்ன விஷயம் என கேட்க உனக்கு பாலில் விஷம் கலக்க விஷம் வாங்கியவன் இவன் தான், உங்க அம்மாவும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. விஷம் கலந்து தான் கொன்று இருக்காங்க என சொல்ல சூர்யா அதிர்ச்சி அடைகிறான். மாரியிடம் சூர்யா இந்த விஷயத்தை சொல்ல அவள் சூர்யாவை அழைத்துச் சென்று தேவி போட்டோ முன்பு விளக்கேத்த சூர்யா கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறான். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைய அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Zee Tamil Tv

சிறந்த கதைகள்