• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • மகன் விக்ராந்தை பழி வாங்க ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமியை தூக்கிய விஜய் டிவி?

மகன் விக்ராந்தை பழி வாங்க ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமியை தூக்கிய விஜய் டிவி?

மகன் மீது உள்ள கோபத்தில் அம்மாவை சேனல் தரப்பினர் பழி வாங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகன் விக்ராந்தை பழி வாங்க ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமியை தூக்கிய விஜய் டிவி?
பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த லட்சுமியின் கதாபாத்திரம் இறந்து போனதாகக் காட்டப்பட்டதன் பின்னணியில் பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    சமீபத்தில் இந்தத் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே. தீபிகா மாற்றப்பட்டார். இதற்கு முன்பு அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த வைஷாலி தனிகா மாற்றப்பட்டு அந்த கதாபாத்தில் தீபிகா நடித்து வந்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் சாய் காயத்ரி நடித்து வருகிறார். ஆனால் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வரும் தற்போதைய ஐஸ்வர்யா கதாபாத்திரம், சற்று முதிர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    தொடர்புடைய செய்திகள்

    இந்நிலையில் தற்போது அந்த சீரியலில் மூர்த்தியின் அம்மாவாக நடித்து வந்த லட்சுமியின் கதாபாத்திரம் இறந்ததைப் போல காட்டப்பட்டு, அதில் நடித்து வந்த ஷீலா தூக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பி-க்காக தான் இப்படி செய்திருக்கிறார்கள் என ஒருபுறம் சொன்னாலும், இதற்கு இன்னொரு காரணமும் உண்டாம்.

    அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமியாக நடித்து வந்தவர் நடிகை ஷீலா, நடிகர் விக்ராந்தின் அம்மா. பிக் பாஸில் போட்டியாளராக கலந்துக் கொள்ள விஜய் டிவி தரப்பில் விக்ராந்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம். அதற்கு அவரும் ஓகே சொல்லியிருந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். அவர் போட்டி சேனலுக்கு சென்றதில் விஜய் டிவி-க்கு ஏற்பட்ட அதிருப்தியின் பிரதிபலிப்பே ஷீலாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூக்கக் காரணம் என்கிறது சின்னத்திரை வட்டாரம்.

    விக்ராந்த் திருமணத்தில்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    377

    விக்ராந்த் திருமணத்தில்

    பொதுவாக இறந்தவர் என்றால் ஒரு ஃபோட்டோவில் மாலை போட்டு காட்டுவார்கள். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலோ ஷீலாவை பிணமாக படுக்க வைத்து, நெற்றியில் காசு வைத்து, ஒரு வாரத்துக்கும் மேல் அந்தக் காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். ஆக மகன் மீது உள்ள கோபத்தில் அம்மாவை சேனல் தரப்பினர் பழி வாங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Published by:Shalini C
    First published:September 21, 2021, 17:34 IST

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube