நடிகர் உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
நடிகர் வடிவேலு சமீபத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த தனது பிரச்னைகளை தீர்த்துக்கொண்டார். அதோடு அவருக்கு எதிராக வழங்கப்பட்ட ரெட் கார்டும் ரத்து செய்யப்பட்டது. இப்போது, உதயநிதியுடன், மாரி செல்வராஜ் இணையும் படத்தில், நடிகர் வடிவேலு இணையவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை வழங்கிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் நடிக்கும் மூன்றாவது இயக்கத்தில் ஹாட்ரிக் அடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து மாரி செல்வராஜ் தனது அடுத்தப் படத்திற்காக உதயநிதியுடன் கைகோர்ப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது அதற்கான வேலைகளும் நடந்து வருகிறதாம். அந்தப் படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Mari selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu