Home / News / entertainment /

கையும் களவுமாக சிக்கிய தர்மலிங்கம்; வாங்கிக் கட்டிக்கொண்ட வேதவள்ளி... கயல் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.!

கையும் களவுமாக சிக்கிய தர்மலிங்கம்; வாங்கிக் கட்டிக்கொண்ட வேதவள்ளி... கயல் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்.!

Kayal

Kayal

Kayal Serial | கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் டாப் 5 இடங்களை தொடர்ந்து பிடித்து கெத்து காட்டி வருகிறது.

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் சன் தொலைக்காட்சி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களுக்குப் போட்டியாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறது. ரியாலிட்டி ஷோக்கள் விஷயத்தில் சற்றே சறுக்கினாலும், சீரியல் விஷயத்தில் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை சன் டி.வி. அவ்வப்போது நிரூபித்து வருகிறது.

சன் டி.வியில் ‘பூவே உனக்காக’, ‘மகராசி’, ‘திருமகள்’, ‘சித்தி 2’, ‘பாண்டவர் இல்லம்’, ‘சந்திரலேகா’, ‘அருவி’, ‘தாலாட்டு’, ‘அபியும் நானும்’, ‘வானத்தை போல’, ‘கண்ணான கண்ணே’, ‘ரோஜா', ‘அன்பே வா’ என பல சீரியல்கள் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் நிலையில், புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி, ‘கயல்’, ‘எதிர்நீச்சல்’ ஆகியவற்றையும் சேர்த்து 15க்கும் அதிகமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் முதல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த சில மாதங்களாகவே டிஆர்பி ரேட்டிங் டாப் 5 இடங்களை தொடர்ந்து பிடித்து கெத்து காட்டி வருகிறது. கயல் என்ற பெண் அப்பா இல்லாத தனது குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறாள், அதனை அழிக்க அவரது பெரியப்பாவின் குடும்பத்தினரும், அவள் மீது கொண்ட ஆசையால் கயல் வேலை பார்க்கும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் என்னென்ன சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள் என்பதை அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் ஒளிபரப்பி வருகின்றனர்.

கயல் ரோலில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவரது அமைதியான காதலன் எழிலரசனாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கார்த்திக் நடிக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ சீரியல் மூலமாக சின்னத்திரையில் கால் பதித்த சைத்ரா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலமாக பிரபலமானார். ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் ஸ்வேதா என்ற வில்லி கேரக்டரில் மிரட்டியவர், இப்போது சன் டி.வி.யில் கயலாக வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். கயல் சீரியல் டிஆர்பியில் ஹிட் அடிக்க காரணமே சைத்ரா ரெட்டியின் அசத்தலான நடிப்பு தான் என்றால் அது மிகையாகாது.

Also Read : எடையைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உயிரிழந்த கன்னட நடிகை- நடந்தது என்ன?

ஏற்கனவே கயல் தங்கை தேவிக்கும், வேதவள்ளியின் மகன் விக்னேஷுக்கும் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற விறுவிறுப்பான கட்டம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அதற்கு மேலும் சுறுசுறுப்பு கூட்டும் விதமாக விக்னேஷுக்கும், அவரது மாமன் மகளுக்கும் கோயிலில் வைத்து கட்டாய கல்யாணம் நடத்த முயற்சி பெற்றது.

Also Read : எனக்கு நடிக்க தெரியாது... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய்டிவி பிரபலம்!

விக்னேஷ் மாமன் மகள் கழுத்தில் தாலி கட்டும் நேரத்தில் கயல் போலீசாருடன் மாஸாக என்ட்ரி கொடுத்து, மணப்பெண்ணான உமாவிற்கு திருமண வயது வரவில்லை என்றும், சட்டத்திற்கு எதிராக அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும் கயல் போட்ட போடில் ஒட்டுமொத்த குடும்பமும் ஆடிப்போய் நின்றனர். உமாவிற்கு திருமண வயது வர இன்னும் 2 நாட்கள் இருப்பதால் கல்யாணம் செய்யக்கூடாது என்றும், மீறினால் அவரது அப்பாவை கைது செய்வோம் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எச்சரித்தார்.

377

அப்போது திருமணத்திற்கு வந்த கயலின் பெரியப்பா தர்மலிங்கம் மற்றும் அவரது பெரியம்மா ஆகியோர் கயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே கோயிலுக்கு சாமி குடும்பிட வந்ததாக சொல்லி சமாளிக்கும் இருவரையும் கயல் வெளுத்து வாங்குகிறார். பெரியப்பா நீங்க நடிக்கிறது அப்படியே தெரியுது, கல்யாணத்துக்கு வந்துவிட்டு என்னை பார்த்ததும் சாமி கூம்பிட வந்ததாக பொய் சொல்லுறீங்களா? என தர்மலிங்கத்தின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார். கல்யாணம் நின்ற கோபத்தில் விக்னேஷின் அம்மா வேதவள்ளி தேவிக்கும், விக்னேஷுக்கும் திருமணம் நடத்த இருந்த அதே தேதியில் விக்னேஷிற்கும், அவர் மாமா மகளுக்கும் திருமணம் நடக்கும் என சவால் விடுகிறார். இந்த கல்யாணத்தை நிறுத்த இனி என்ன செய்ய போகிறார் கயல் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Tags:Entertainment, Sun TV, TV Serial