நடிகை தேவயானியின் மகள்களை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார் புதுப்புது அர்த்தங்கள் விஜே பார்வதி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சீரியலில் பார்வதிக்கு தேவயானி மாமியார் ரோலில் நடிக்கிறார் ஆனால் நிஜத்தில் இருவரும் அக்கா - தங்கை போல் பயங்கர நெருக்கம் என்ற தகவலும் இணையத்தில் உலா வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தேவயானிக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஹோம்லி பியூட்டி என அழைக்கப்படும் இவர் அஜித், விஜய், சரத் குமார்,விஜயகாந்த், பார்த்திபன் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குறிப்பாக அஜித்துடன் இவர் நடித்த காதல் கோட்டை தமிழ் சினிமாவின் மைல்கல். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கில் பிஸியாக நடித்தவர் நடுவில் பிரேக் எடுத்தார். அதன் பின்பு கணவர், குடும்பம் என பர்சனல் லைஃப்வில் கவனம் செலுத்தினார்.
பிக் பாஸ் சீசன் 6 க்கு செல்லும் குக் வித் கோமாளி பிரபலம்.. இணையத்தில் உலாவும் இந்த செய்தி உண்மையா?
கூடிய விரைவில் அது நடக்க போகுது.. சித்தி 2 கவின் குறித்து வெளியான குட் நியூஸ்!
இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சந்தோஷுக்கு அம்மா ரோலில் தேவயானி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதே போல் விஜே பார்வதி, பவித்ரா ரோலில் இந்த சீரியலில் தேவயானி மருமகளாக நடித்து வருகிறார். கதைப்படி இப்போது பவி, கர்ப்பமாக இருக்கிறார். அவரை லட்சுமியும் சந்தோஷூம் மாறி மாறி கவனித்து கொள்கின்றனர். இந்த சீரியலில் கதைப்படி லட்சுமி அம்மா, பவித்ராவிடம் மாமியார் போல் நடந்து கொள்ளாமல் அம்மா போல் பவியை கவனித்து கொள்வார். இவர்களின் உறவு மிகவும் அழகாக சீரியலில் காட்சிப்படுத்தப்படும். இது ஆன் ஸ்கிரீனில்.
ஆனால் நிஜத்தில் பார்வதியும் தேவயானியும் அக்கா - தங்கை போல் பயங்கர நெருக்கமாக இருப்பார்களாம். தேவயானி அடிக்கடி அவரே சமைத்த உணவுகளை செட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பாராம். தேவயானியின் பிறந்த நாளை கூட ஒட்டுமொத்த புதுப்புது அர்த்தங்கள் சீரியல் குழுவும் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின, இந்நிலையில் விஜே பார்வதி தேவயானியின் வீட்டுக்கு சென்று அவரின் 2 மகள்களை சந்தித்து குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து இருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் பார்வதி பகிர்ந்து இருக்கிறார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Television, TV Serial, Zee tamil