Home / News / entertainment /

இது என்ன புது வேஷம் - ‘அம்மன் 3’ சீரியலில் காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.!

இது என்ன புது வேஷம் - ‘அம்மன் 3’ சீரியலில் காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.!

Amman 3

Amman 3

Amman 3 Serial Update | பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் அம்மன் 3 சீரியலில் அடுத்து ஒரு அதிரடி ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றன.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ‘அம்மன் 3’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, தொடர்ந்து டிஆர்பி ரேட்டீங்கிலும் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. இந்த தொடரின் முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது ‘அம்மன் 3’ ஒளிபரப்பாகி வருகிறது.

கதைக்களமும், துணைக் கதாபாத்திரங்களும் மாறினாலும், லீட் ரோலில் நடித்து வரும் பவித்ரா கவுடா மாறவே இல்லை. 2020ம் ஆண்டு முதலே இவர் தான் அம்மன் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஈஸ்வராக அமல்ஜித், சாரதாவாக ஜெனிபர், தாமோதரனாக ஹரிசங்கர் நாராயணன், மந்திரவாக சந்திரிகா, காந்தாரியாக சுப ரக்‌ஷா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் அம்மன் 3 சீரியலில் அடுத்து ஒரு அதிரடி ட்விஸ்ட்கள் காத்திருக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் சக்தியும், ஈஸ்வரும் மாறுவேடத்தில் கதிர்வேல் வீட்டிற்குள் நுழைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு முந்தைய எபிசோட்டில், சக்தி மற்றும் குழந்தை ரத்தினம் சர்ப்பத்திற்கு பிரபலமான ஒரு கோவிலுக்குச் செல்வதில் இருந்து கதை தொடங்குகிறது, மேலும் பாம்புக்கு யார் பிரார்த்தனை செய்கிறார்களோ அவர்களது அனைத்து பிரச்னைகளிலிருந்தும் விடுபடுவதாக நம்பப்படுகிறது. கோவிலில், ஒரு மர்மமான சித்தர், ரத்தினத்திற்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி சக்தியை எச்சரிக்கிறார்.

மந்திரவாதி தாரகன் ரத்னாவை கடத்தி பலியிட நினைக்கிறார். ஆனால் அவர்களிடம் இருந்து ரத்னாவை சக்தி பத்திரமாக காப்பாற்றிவிட்டால். குழந்தை ரத்னா யாருக்கு சொந்தம் என தெரியும் வரை கிராமத்தில் இருக்க வேண்டும் என ஊர் பஞ்சாயத்தில் தீர்வாகிறது. இதனையடுத்து சித்தர் கொடுத்த சக்தி வாய்ந்த சங்குடன் குழந்தை ரத்னாவையும், பாட்டியையும் சக்தி அனுப்பிவைக்கிறாள்.

Also Read : சிம்புவை திருமணம் செய்து கொள்ள போகிறாரா சீரியல் நடிகை - சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்!

வழியில் சங்கு தொலைந்து போய்விட்டது. அது மந்திரவாதி தாரகன் கையில் சிக்கியுள்ளது. அதை வைத்து தாரகன் ஏதோ பூஜை செய்து கொண்டிருக்கிறார். இந்த சதியை எல்லாம் முறியடிக்கவே சக்தியும், ஈஸ்வரும் மாறுவேடத்தில் கதிர்வேல் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

377

அந்த வீடியோவில், மலையூரில் வசித்து வரும் கதிர்வேல் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிடுகிறது. அதனை பிடிக்க வேலைக்காரர் பாம்பு பிடிப்பவரை அழைத்து வருவதாக சொல்கிறார். அடுத்த காட்சியில் ஈஸ்வர் பாம்பு பிடிப்பவராகவும், சக்தி குறி சொல்லும் பெண்ணாகவும் வேடமிட்டு கதிர்வேல் வீட்டிற்குள் நுழைவது காட்டப்பட்டுள்ளது.

Also Read : மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்!

இதனைத்தொடர்ந்து ஈஸ்வர் மற்றும் சக்தி கதிர்வேலின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக மாறுகிறார்கள். எனவே கதிர்வேல் அவர்களுக்கு தங்க இடமும், உணவும் கொடுத்து ஆதரவு தருகிறார். தங்கள் கட்டளைப்படி நடந்தால் செல்வம் பெருகும் என்று கதிர்வேலுவை சக்தி நம்பவைக்கிறார். தற்போது கதிர்வேலை கைப்பாவையாக வைத்து வில்லன்களுக்கு இடையே பிரச்னைகளை உருவாக்கும் பணியில் சக்தியும், ஈஸ்வரும் இறங்கியுள்ளனர். இந்த முயற்சியில் ஜோடி வெற்றி பெற்றதா என்பது பல அதிரடி திருப்பங்களுடன் அடுத்தடுத்து எபிசோட்களாக ஒளிபரப்பாக உள்ளது.

Tags:Colors Tamil | கலர்ஸ் தமிழ், Entertainment, TV Serial