Home / News / entertainment /

பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரப்போகும் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்!

பிக் பாஸ் தாமரை செல்விக்கு வீடு கட்டி தரப்போகும் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்!

பிக் பாஸ் தாமரை

பிக் பாஸ் தாமரை

தாமரை அவ்வப்போது தங்களுக்கு பல உதவிகளை செய்து வருவதாக அவரது தாய் மற்றும் சகோதரிகள் கூறினர்

தமிழ் சின்னத்திரையில் பிரமாண்ட மற்றும் மெகா ஹிட் ஷோவாக இருந்து வருகிறது பிக்பாஸ். கடந்த 2017-ஆம் ஆண்டு இதன் முதல் சீசன் ஒளிபரப்பாகி துவங்கியது முதல் தற்போது வரை வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது.

இந்த 5 சீசன்களையுமே உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் மிக சுவாரசியமாக தொகுத்து வழங்கியதும் இந்த ரியாலிட்டி ஷோ, மெகாஹிட் ஆக முக்கிய காரணம். பிக்பாஸ் ஷோவில் மக்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்களுடன், இதுவரை தெரியாத சில நபர்களும் பங்கேற்பது வழக்கம். அப்படி பெரும்பாலான மக்களுக்கு முன்பின் தெரியாத பல நபர்கள், பிக்பாஸில் பங்கேற்று தற்போது கோடிக்கணக்கான மக்களுக்கு தெரிந்தவர்களாகவும், பிரபலமாகவும் உள்ளனர்.

தேவயானி மீது செம்ம கோபத்தில் வனிதா விஜயகுமார்.. என்ன விஷயம் தெரியுமா?

அப்படிப்பட்ட ஒருவர் தான் பிக்பாஸின் சீசன் 5-ல் பங்கேற்று மக்களை பெரிதும் கவர்ந்த தாமரை செல்வி. பெரிய பின்புலம் இல்லாத சாதாரண மேடை நாடக கலைஞர் தான் இந்த தாமரைச்செல்வி. இவரெல்லாம் எந்த நம்பிக்கையில் பிக்பாஸ் வந்தார் என்று சீசன் 5 துவங்கிய போது பலரும் நினைத்தனர். ஆனால் பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பை பொய்யாக்கி மிக அருமையாக கேமை விளையாடி கிட்டத்தட்ட இறுதி வரை களத்தில் நின்றார். பிக்பாஸ் துவங்கிய 98-வது நாளில் தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தனது வெள்ளந்தியான பேச்சு மற்றும் நடத்தை அதே சமயம் கேமில் சுதாரிப்பாக இருந்தது என பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தன்னை இடம் பிடித்தார் தாமரைச்செல்வி.

குறிப்பாக பொருளாதாரம் குறைந்த வர்க்கத்தை சேர்ந்த தாமரை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தும், பாதியில் போக மாட்டேன், இறுதி வரை விளையாடுவேன் என்று காட்டிய உறுதி அவர் மீதான மரியாதையை அதிகமாக்கியது. பிக்பாஸ் அல்டிமேட்டிலும் பங்கேற்று இறுதி வரை நன்றாக விளையாடி மூன்றாவது ரன்னர்-அப்பாக வந்தார். ஏழை வர்க்கத்தை சேர்ந்த தாமரைச்செல்வி தற்போது கணவன் மற்றும் மகனுடன் நல்ல மாடி வீட்டில் வசித்து வந்தாலும், அவரது தாய் மற்றும் சகோதரிகள்  குடிசை வீட்டில் தான் வசித்து வருகிறார்கள்.

சரவணன் தங்கச்சி பார்வதி உயிருக்கு ஆபத்து! ’ராஜா ராணி 2’வில் எதிர்பார்க்காத திருப்பம்!

சமீபத்தில் தாமரையின் தாய் மற்றும் சகோதரியை தனியார் சேனல் ஒன்று பேட்டி எடுத்த போது தான், இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தது. தாமரை அவ்வப்போது தங்களுக்கு பல உதவிகளை செய்து வருவதாக அவரது தாய் மற்றும் சகோதரிகள் கூறினர். எனினும் இந்த வீட்டால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருவதாக தாமரையின் தாய் கண்ணீர் மல்க கூறினார். இந்நிலையில் இவ்விஷயத்தை கேள்விப்பட்ட பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் "தாமரை இல்லம்" என்ற திட்டம் குறித்து தனது யூடியூபில் பேசி உள்ளார்.

அந்த வீடியோவில் தாமரையின் தாயை நேரில் சந்தித்து பேசியதாகவும், விரைவில் நல்லுள்ளங்கள் படைத்த பலரின் உதவியுடன் தாமரையின் குடும்பத்தினர் நல்ல வீடு ஒன்றில் வசிப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய வீடு ஒன்றை கட்டி தர திட்டமிட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த அறிவிப்பு தாமரையின் ரசிகர்களை மட்டுமல்ல பலரது வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

377

Tags:Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv