பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. ஏற்கெனவே இணையத்தில் பரவியது போலவே பிரியங்கா மற்றும் ராஜூ இறுதி மேடையை அலங்கரித்தனர். இறுதி நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல் ஹாசன், ராஜூவை வெற்றியாளராக அறிவித்தார். இவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வெள்ளித்திரையில் ராஜூவை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திக் கொண்டிருக்கின்றனர். இடையில் நடந்த பிக் பாஸ் கொண்டாட்டங்கள் மற்றும் விஜய் டிவி டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் ராஜூ என் ட்ரி கொடுத்து நடனம் ஆடி இருந்தார். தற்போது அடுத்த மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல நண்பர்களாக பழகி வந்த பிரியங்கா, ராஜூ இருவரும் மீண்டும் ஒன்றிணைந்து விஜய் டி.வி. பிபி ஜோடிகள் சீசன் 2வில் கலந்துக் கொள்கின்றனர்.
ராதிகா கல்யாணத்தில் பாக்கியா… ஷாக்கில் ஆடிப் போன கோபி!
இந்த பிபி ஜோடிகள் 2வில் தாமரை அவரின் கணவர், அமீர் பாவ்னி, சுஜா வருணி அவரின் கணவர், வேல் முருகன் இசைவாணி, தாமரை செல்வி அவரின் கணவர், ஸ்ருதி அபிஷேக் என ஒட்டுமொத்த பிக் பாஸ் போட்டியாளர்களும் கலந்துக் கொள்கிறார்கள்.
இவர்களை போல தான் ராஜூவும் பிரியங்காவும் போட்டியாளராக கலந்து கொண்டு டான்ஸ் ஆட போகிறார்கள் என ரசிகர்கள் பலரும் நினைத்தனர். ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் 2 வது புரமோவில் ராஜூவும் பிரியங்கா இந்த ஷோவின் ஆங்கர் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது. இருவரும் ஏற்கெனவே பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஆடிய நடனம் சூப்பர் டூப்பர் ஹிட். அப்படி ஒரு நடனத்தை வாரம் வாரம் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க கடைசியில் இருவரும் சேர்ந்து தான் இந்த நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்ய இருப்பது உறுதியாகியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Anchor Priyanka, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Vijay tv